For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் போகலை அந்த அழுக்கு.. விளையாட்டிலும் இருக்கு.. நிறவெறிக்கு எதிராக ஓங்கி ஒலித்த 30 குரல்கள்!

ஜோஹன்னஸ்பர்க்: விளையாட்டில் நிறவெறி இன்னும் போகவில்லை. இன்னும் இருக்கிறது என்று தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 30 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஓங்கி குரல் கொடுத்துள்ளனர்.

Recommended Video

BCCi to reschedule Australia and England series

பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவாக இவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் கிரிக்கெட் உலகம் பரபரப்படைந்துள்ளது. முன்னாள் வீரர்களான மக்காயா டினி, ஹெர்ஷெல்லி ஜிப்ஸ், வெர்னான் பிளான்டர் உள்ளிட்ட பிரபல முன்னாள் வீரர்கள் இந்த கூட்டறிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த விவகாரத்தில் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த வேகப் பந்து வீச்சாளர் லுங்கி அங்கிடிக்கு எதிராக சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருப்பதற்கும் இந்த 30 மாஜி வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

30 மாஜி வீரர்கள்

30 மாஜி வீரர்கள்

டினி, பிளான்டர், ஜிப்ஸ், ஆஷ்வெல் பிரின்ஸ், ஜேபி டுமினி, பால் ஆடம்ஸ் உள்ளிட்ட 30 வீரர்கள் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை தென்னாப்பிரிக்காவில் புயலைக் கிளப்பியுள்ளது. அதில் அவர்கள் லுங்கி அங்கிடிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரைக் கண்டித்து அறிக்கை விட்ட பாட் சிம்காக்ஸ், போத்தா டிப்பென்னர், ரூடி ஸ்டெயின், பிரையன் மெக்மில்லன் ஆகியோருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

லுங்கி சொன்னது சரியே

லுங்கி சொன்னது சரியே

இதுதொடர்பான அந்த அறிக்கையில், நாங்கள் லுங்கிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அவருடைய நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். அவருக்கு முழு உறுதுணையாக இருக்கிறோம். லுங்கி மீதான விமர்சனத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இதுகுறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாட் சிம்காக்ஸ் போன்றோர் கூறியுள்ள விமர்சனத்தின் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கிடிக்கு ஆதரவாக கிரிக்கெட் வாரியம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அவர் அப்படித்தான்

அவர் அப்படித்தான்

சிம்காக்ஸ் போன்றோர் அங்கிடியை விமர்சிப்பதில் ஆச்சரியம் இல்லை. அவர்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் அங்கிடியின் கருத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். விளையாட்டில் இன்னும் நிறவெறி இருக்கத்தான் செய்கிறது. அதைப் போக்க அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம் அந்தப் போராட்டத்துக்கு வலுவூட்டும் என்று கூறியுள்ளனர் மாஜி வீரர்கள்.

நிறவெறிக்கு எதிர்ப்பு

நிறவெறிக்கு எதிர்ப்பு

அமெரிக்காவில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம் அமெரிக்காவில் வெடித்துக் கிளம்பியது. இது இப்போது உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது. பலரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். போராட்டங்களும் நடந்து வருகின்றன என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Wednesday, July 15, 2020, 11:23 [IST]
Other articles published on Jul 15, 2020
English summary
Thirty former South Africa cricketers came out in support of the global Black Lives Matter movement
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X