For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் முறையாக ஆஸி.க்கு "வெள்ளை" அடித்து புதிய வரலாறு படைத்த இந்தியா!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. இன்று நடந்த 3வது டுவென்டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், அங்கு நடந்த ஒரு தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வெள்ளை அடித்து வரலாறு படைத்து விட்டது இந்தியா.

இதுவரை ஆஸ்திரேலியாவில் நடந்த எந்த ஒரு இரு தரப்பு தொடரிலும் "வெள்ளை" அடித்து இந்தியா வெற்றி பெற்றதில்லை. ஆனால் தற்போது அந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது.

ஏற்கனவே டுவென்டி 20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்ற நிலையில் இன்று நடைபெற்ற 3வது மற்றும் இறுதிப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வெள்ளை அடித்துள்ளது.

சர்ச்சை டூ சாதனை

சர்ச்சை டூ சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின்போது தொடர்ந்து முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்றதால், கேப்டன் டோணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.

5வது போட்டியிலிருந்து அட்டகாசம்

5வது போட்டியிலிருந்து அட்டகாசம்

ஆனால் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று ஆறுதல் அடைந்ததைத் தொடர்ந்து டோணி மீதான அவப் பெயர் அகன்றது.

முதல் இரு டுவென்டி 20 போட்டிகளில்

முதல் இரு டுவென்டி 20 போட்டிகளில்

இந்த நிலையில் முதல் இரு டுவென்டி 20 போட்டிகளிலும் இந்தியா அட்டகாசமாக ஆடி வென்ற விதமும், தொடரைத் தட்டிச் சென்ற ஸ்டைலும் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தது.

புதிய வரலாறு

புதிய வரலாறு

இந்த நிலையில் இன்று 3வது மற்றும் கடைசி டுவென்டி 20 போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா புதிய வரலாறு படைத்தது.

வெள்ளை அடித்தது

வெள்ளை அடித்தது

இன்றைய போட்டியிலும் இந்தியா வென்றால் 3-0 என்ற கணக்கில் வெள்ளை அடித்து வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. இப்படி இதுவரை எந்த ஒரு தொடரிலும் ஆஸ்திரேலியாவில் இந்தியா வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை இன்று சாதித்தது இந்தியா.

டோணிக்கும் சாதனை

டோணிக்கும் சாதனை

இதன் மூலம் எந்த ஒரு இந்திய கேப்டனுக்கும் கிடைக்காத பெருமை தற்போதைய கேப்டன் டோணிக்கும் கிடைத்துள்ளது.

பலவீனமான ஆஸி. அணி

பலவீனமான ஆஸி. அணி

ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் பலவீனமான நிலையில்தான் களம் இறங்கியது. முன்னணி வீரர்களான கேப்டன் ஆரோன் பின்ச் காயம் காரணமாக விளையாடவில்லை. அடுத்து ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஜான் ஹேஸ்டிங்ஸ், கனே ரிச்சர்ட்சன், மாத்யூ வாட் ஆகியோர் நியூசிலாந்து தொடருக்காகப் போய் விட்டனர்.

வாட்சன் தலைமையில்

வாட்சன் தலைமையில்

இதனால் ஷான் வாட்சன் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை இன்று சிட்னியில் எதிர்கொண்டது. இருப்பினும் வாட்சன் சதம் போட்டார். ஆனாலும் அது பலன் தரவில்லை.

இதே சிட்னியில்

இதே சிட்னியில்

இதே சிட்னி மைதானத்தில்தான் இந்தியா 5வது ஒரு நாள் போட்டியில் அட்டகாசமாக வெற்றி பெற்றது என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Sunday, January 31, 2016, 18:19 [IST]
Other articles published on Jan 31, 2016
English summary
Captain Mahendra Singh Dhoni, who has faced a lot of criticism in recent times, now has a chance to leave Australia with a historic feat on Sunday (January 31). Dhoni, already India's greatest limited overs leader, can add one more major achievement to his CV if he leads the team to victory against Australia in the 3rd and final Twenty20 International at Sydney Cricket Ground (SCG).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X