For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவில் ஜடேஜாவுக்கு மாற்று யார்? 4 வீரர்களை குறிவைக்கும் தோனி.. என்ன பிளான் ?

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஜடேஜா விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அடுத்த சீசனில் அவர் வேறு அணிக்கு தான் விளையாடுவார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் அடித்து கூறுகின்றனர்.

அதற்கு காரணம், கேப்டன் பதவியில் முழு சுதந்திரத்தை சிஎஸ்கே அணி தரவில்லை என்றும், அணி தோல்வி அடைந்ததற்கு ஜடேஜாவின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என்பது போன்ற தோற்றமும் உருவாகிவிட்டது.

மேலும் ஜடேஜா கேப்டனாக தன்னை தயார்படுத்தி கொள்ளவில்லை. ஜடேஜாவுக்கு ஊட்டிவிட முடியாது என்றும் தோனி பேசியது தான் அவரின் கோபத்திற்கு காரணம்.

ட்ரேடிங் விண்டோ ரெடியா??.. பரபரப்பு கட்டத்தில் ஜடேஜா - சிஎஸ்கே பிரச்சினை.. என்னதான் நடக்கிறது? ட்ரேடிங் விண்டோ ரெடியா??.. பரபரப்பு கட்டத்தில் ஜடேஜா - சிஎஸ்கே பிரச்சினை.. என்னதான் நடக்கிறது?

நல்லதா? கெட்டதா?

நல்லதா? கெட்டதா?

ஜடேஜா விலகினால் சிஎஸ்கேவுக்கு நல்லதா, கேட்டதா என்று முதலில் பார்ப்போம். ஜடேஜா போன்ற வீரர் அணியிலிருந்து சென்றால், அது நிச்சயம் பின்னடைவு தான் . ஆனால் அதில் நல்லதும் இருக்கிறது. ஜடேஜாவுக்கு சிஎஸ்கே அணி 16 கோடி ரூபாயை தருகிறது. தற்போது அந்த பணத்தை வைத்து ஏலத்தில் பெரிய வீரர்களை சிஎஸ்கே அணி தட்டி தூக்கலாம்.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

ஜடேஜாவை சிஎஸ்கே அணி டிரேடிங் செய்ய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், டெல்லி அணிக்கு ஜடேஜாவை கொடுத்து விட்டு, அங்கிருந்து அக்சர் பட்டேலை தட்டி தூக்கலாம். அக்சா பட்டேல் ஜடேஜாவை போன்றே பேட்டிங் மற்றும் பந்துவீச கூடியவர். இதனால், அவருக்கு பதில் சரியான தேர்வாக அக்சர் பட்டேல் விளங்குவார். அக்சர் தற்போது பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

அன்மோல்பிரித் சிங்

அன்மோல்பிரித் சிங்

மும்பை அணியின் 24 வயதான அன்மோல்பிரித் சிங், கடந்த சீசனில் சரிவர விளையாடவில்லை. ஆனால், பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அதிரடியாக செயல்பட கூடியவர். அனுபவம் இல்லை என்றாலும் திறமைக்கு பஞ்சமே இல்லை. தோனி போன்ற நபரிடம் அன்மோல்பிரித் சிங் வந்தால், அவரை எப்படி கரையேற்ற வேண்டும் என்று தலைக்கு நன்றாகவே தெரியும்.

சாம் கரண்

சாம் கரண்

ஜடேஜாக்கு பதில் இந்திய வீரரை தான் சேர்க்க வேண்டும் என்று அல்ல. காரணம், மினி ஏலத்தில் வேறு ஏதாவது வெளிநாட்டு வீரரை வெளியேற்றிவிட்டு, அவருக்கு பதில் சாம் கரணை கூட அணியில் சிஎஸ்கே சேர்க்கலாம். இதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிஎஸ்கே வலு பெறும். ஜடேஜாவுக்கு பதில் வேறு ஏதாவது சுழற்பந்துவீச்சாளரை வைத்து தோனி சமாளித்துவிடுவார்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

ஜடேஜா அணியை விட்டு சென்றால், சிஎஸ்கேவுக்கு கிடைக்கும் 16 கோடி ரூபாயை வைத்து சிஎஸ்கே தாராளமாக பென் ஸ்டோக்ஸை தட்டி தூக்கலாம். இதன் மூலம் சிஎஸ்கேவின் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் ஸ்டோக்ஸை பேட்டிங்கில் முன்வரிசையில் பயன்படுத்தலாம். பந்தவீச்சிலும் நெருக்கடியான கட்டத்தில் ஸ்டோக்ஸ் வைத்து விக்கெட் வீழ்த்தலாம். இதனால் ஜடேஜா சென்றாலும் சிஎஸ்கே கவலைப்பட தேவையில்லை.

Story first published: Tuesday, August 16, 2022, 14:07 [IST]
Other articles published on Aug 16, 2022
English summary
4 choices for CSK to Replace Jadeja in upcoming IPL season சிஎஸ்கேவில் ஜடேஜாவுக்கு மாற்று யார்? 4 வீரர்களை குறிவைக்கும் தோனி.. என்ன பிளான் ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X