இந்தியாவை மிரட்டும் 4 தென்னாப்பிரிக்க வீரர்கள்.. இவங்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றி.. விவரம்

திருவனந்தபுரம் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மிரட்ட காத்திருக்கும் 4 தென்னாப்பிரிக்க வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

ஒரே படத்தை விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்வது போல், 3 மாதத்திற்கு முன்பு வந்த தென்னாப்பிரிக்க அணியை மீண்டும் அழைத்துள்ளது பிசிசிஐ.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நடைபெறும் போட்டிகள் என்பதால், இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்குகிறது. இதில் தென்னாப்பிரிக்காவின் முக்கிய வீரர்கள் குறித்து காணலாம்

3 அதிரடி மாற்றங்கள்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டி.. ப்ளேயிங் 11ல் ரோகித் மாஸ் முடிவு! 3 அதிரடி மாற்றங்கள்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டி.. ப்ளேயிங் 11ல் ரோகித் மாஸ் முடிவு!

ரீசா ஹெண்ட்ரிக்ஸ்

ரீசா ஹெண்ட்ரிக்ஸ்

தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரராக விளங்கும் ஹெண்ட்ரிக்ஸ் சமீப காலமாக செம பார்மில் இருக்கிறார். இங்கிலாந்தக்கு எதிரான டி20 தொடரில் கூட தொடர்ந்து இரண்டு அரைசதம் விளாசிய ஹெண்ட்ரிக்ஸ், அணிக்கு வெற்றியை தேடி தந்து இருக்கிறார். SA 20 லீக் தொடரில் கூட ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஆண்ட்ரிச் நோக்கியா

ஆண்ட்ரிச் நோக்கியா

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சின் முதுகு எலும்பாக விளங்கும் நோக்கியா, கடந்த தொடரின் போது காயம் காரணமாக விளையாடவில்லை. நோக்கியா இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலககோப்பைக்கு முன்பு நோக்கியா போன்ற பந்துவீச்சாளரை எதிர்கொள்வது இந்திய வீரர்களுக்கு நல்ல அனபவத்தை கொடுக்கும்.

ஸ்டப்ஸ்

ஸ்டப்ஸ்

தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கும் ஸ்டப்ஸ் ஏற்கனவே தனது திறமையை பல போட்டிகளில் நிரூபித்து இருக்கிறார். பெரிய சிக்சர்களை அடிக்கும் திறமை கொண்ட ஸ்டப்ஸ் ஆட்டத்தின் போக்கையே தலைக்கீழ் மாற்ற கூடியவர். இவரை சதாளிப்பது இந்திய பவுலர்களுக்கு கொஞ்சம் சிரமம் தான்.

குயின்டன் டி காக்

குயின்டன் டி காக்

ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலம் இந்தியாவில் எப்படி பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது டி காக்கிற்கு கை வந்த கலை. டி காக் அதிரடியாக விளையாடி அவ்ரது அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்க கூடியவர். இதனால் இவரது விக்கெட்டை விரைவில் வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவுக்கு நல்லது. இதுவரை இந்தியாவுக்கு எதிராக 6 டி20 போட்டியில் விளையாடியுள்ள டி காக் இரண்டு முறை அரைசதம் அடித்து இருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
4 South African cricketers plays a key role in t20 game vs india இந்தியாவை மிரட்டும் 4 தென்னாப்பிரிக்க வீரர்கள்.. இவங்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றி.. விவரம்
Story first published: Wednesday, September 28, 2022, 18:02 [IST]
Other articles published on Sep 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X