சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் 6வது போட்டியில் ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்எச் அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் ஆர்சிபியின் 149 ரன்கள் இலக்கை சேஸ் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் இலக்கை அடைய முடியவில்லை.

இதனிடையே, சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், இந்த போட்டியில் தனது 49வது அரைசதத்தை கடந்துள்ளார்.

6வது போட்டி

6வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 6வது போட்டியில் டாஸ் வென்ற எஸ்ஆர்எச் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் ஆடிய ஆர்சிபி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை அடித்திருந்தது. அந்த அணியின் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை அளித்திருந்தனர்.

வார்னர் அரைசதம்

வார்னர் அரைசதம்

இந்நிலையில் அடுத்ததாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மட்டுமே அரைசதத்தை கடந்துள்ளார். அவர் 37 பந்துகளில் 54 ரன்களை அடித்துள்ளார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடக்கம். 145.95 ஸ்டிரைக் ரேட்டில்அவர் இந்த அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

49வது அரைசதம்

49வது அரைசதம்

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் 49வது அரைசதத்தை இன்றைய போட்டியின்மூலம் அவர் பூர்த்தி செய்துள்ளார். இதுவரை அவர் 144 இன்னிங்ஸ்களை ஐபிஎல்லில் விளையாடி இந்த 49வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஆளுமையை தொடர்ந்து நிரூபித்து வரும் வீரர்களில் வார்னரும் ஒருவர்.

39வது அரைசதம்

39வது அரைசதம்

கடந்த 2014ல் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்த டேவிட் வார்னர், அந்த அணிக்காக 39 அரைசதங்கள்மற்றும் 2 சதங்களை அடித்துள்ளார். அந்த அணிக்காக அவர் ஆடியுள்ள இன்னிங்ஸ்கள் 89. ஆரஞ்சு ஆர்மி என்று கூறப்படும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஒன் மேன் ஆர்மியாக விளங்கி வருபவர் டேவிட் வார்னர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
David Warner came to SRH in 2014, since then he has 39 fifty and 2 hundreds from 89 innings
Story first published: Wednesday, April 14, 2021, 23:27 [IST]
Other articles published on Apr 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X