For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிவேக ரன்கள்.. விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்தார் கோஹ்லி

By Mathi

கொச்சி: குறைவான எண்ணிக்கையிலான சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்து, மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸின் உலக சாதனையை இந்திய அணியின் விராட் கோஹ்லி சமன் செய்திருக்கிறார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் 114 ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். அதேபோல் நேற்றைய கொச்சி ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியின் விராத் கோஹ்லியும் 114 ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிவேக 5,000 ரன்கள் என்ற உலக சாதனைப் பட்டியலில் கோஹ்லி மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

அடுத்த இடங்களில் யார்?

அடுத்த இடங்களில் யார்?

இவர்களைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா, கிரீனிட்ஜ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

லாரா

லாரா

லாரா மொத்தம் 118 போட்டிகளில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை எட்டியிருக்கிறார்.

கிரீனிட்ஸ்

கிரீனிட்ஸ்

இதேபோல் கிரீனிட்ஜ் 121 போட்டிகளிலும் டிவில்லியர்ஸ் 124 போட்டிகளிலும் விளையாடி 5 ஆயிரம் ரன்களை எட்டினர்.

கங்குலி

கங்குலி

விராத் கோஹ்லிக்கு முன்னதாக அதிவேகமாக 5000 ரன்களை எடுத்த இந்திய வீரர் கங்குலி. அவர் 126 இன்னிங்ஸில் 5,000 ரன்களைக் கடந்தார். அவர் இப்போது இந்தப் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளார்.

பின்வரிசையில்..

பின்வரிசையில்..

கங்குலியைத் தொடர்ந்து ஜோன்ஸ் 128 போட்டிகள், ஸ்மித் 131 போட்டிகள், ஹைய்டன் 133, டோணி, கவுதம் காம்பீர் 135 போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எட்டினர்.

Story first published: Friday, November 22, 2013, 11:04 [IST]
Other articles published on Nov 22, 2013
English summary
India's Virat Kohli matched Vivian Richards' record during the first One Day International against West Indies here at Nehru Stadium on Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X