சிஎஸ்கே,ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.குழப்பத்தில் மும்பை ரசிகர்கள்..வெளியானது ஐபிஎல் அப்டேட்

சென்னை: நடப்பாண்டு ஐபிஎல்-காக இந்தியாவில் 5 மைதானங்களை பிசிசிஐ தேர்வு செய்து வைத்துள்ளது.

14வது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற நிலையில் இந்த முறை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதான் பிளான்.. 8 மணி நேரம் வீடியோ பார்த்த அஸ்வின்.. தமிழக ஜாம்பவானின் அசர வைக்கும் திட்டம்!

ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்காக பிசிசிஐ உறுப்பினர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 5 மைதானங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

5 இடங்கள்

5 இடங்கள்

ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக முதற்கட்டமாக சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை ஸ்டேடியம்

மும்பை ஸ்டேடியம்

பிசிசிஐ முதலில் மொத்த ஐபிஎல் போட்டிகளையும் மும்பையில் நடத்த திட்டமிட்டது. ஆனால் அங்கு கொரோனா 2ம் அலை காரணமாக அம்மாநில அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. மும்பையில் 8,700 கொரோனா பாதிப்புகளை கடந்துள்ளது. இதனால் அங்கு போட்டி நடப்பது சந்தேகமே.

 புதிய முறை

புதிய முறை

இந்தாண்டு ஐபிஎல் போட்டி ( Cluster Caravan) முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது உலகக்கோப்பை தொடரை போல 8 அணிகளையும் 2 பிரிவுகளாக பிரித்து குறிப்பிட்ட 2 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படும். பின்னர் ப்ளே ஆப்-ன் போது வேறு நகரங்களுக்கு மாற்றப்படும்.

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மார்ச் 27, ஏப்.1, 6, 10,17, 22,26,29, மே 2 என 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு ஐபிஎல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஐபிஎல் போட்டிக்கு இடையூராக இருக்காது என்றும் அது வெற்றிகரமாக நடைபெறும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
5 centres shortlisted for IPL 2021 including Chennai, Bengaluru
Story first published: Saturday, February 27, 2021, 14:00 [IST]
Other articles published on Feb 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X