For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?

ராஞ்சி : டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் தேனிலவு காலம் முடிந்து, தற்போது அக்னி பரிட்சை தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். இலங்கைக்கு எதிராக ஹர்திக் பாண்டியா டாஸ் தேர்வின் போது பல தவறான முடிவை எடுத்து தப்பித்துக் கொண்டார்.

ஆனால் இப்போது அவர் முன் இருக்கும் அணி பல அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட நியூசிலாந்து ஆகும். நியூசிலாந்துக்கு எதிராக அப்படி ஒரு தவறை செய்தால் நிச்சயம் இந்தியாவுக்கு இது மறக்க வேண்டிய தொடராக அமைந்து விடும்.

இந்த நிலையில் நியூசிலாந்து தொடரில் ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்கள் என்ன என்று தற்போது பார்க்கலாம்.

இரண்டாவதாக பந்துவீச்சு

இரண்டாவதாக பந்துவீச்சு

ஜனவரி மாதம் என்பது இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் இந்தியா விளையாடும் இந்த மூன்று போட்டிகளில் இரண்டாவது பந்து வீசும் போது பந்துவீச்சாளர்களுக்கு கடும் சிரமம் இருக்கும். மேலும் நியூசிலாந்து அணி வீரர்கள் சுலபமாக சிக்ஸர்கள் அடிக்கக்கூடியவர்கள். ஒரு நாள் தொடரிலே அவர்கள் எந்த அளவுக்கு அபாயகரமான வீரர்கள் என்று காண்பித்து விட்டார்கள்.

 அதிரடி பேட்ஸ்மேன்கள்

அதிரடி பேட்ஸ்மேன்கள்

இதனால் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா நான் தலைகீழாக தான் குதிப்பேன் என்று அணியை நெருக்கடிக்கு தள்ளாமல் டாஸ் வென்று சரியான முடிவு எதுவோ, அதை எடுப்பதே அவருக்கு நல்லது. அதை மீறியும் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் இந்திய அணிக்கு வெற்றி எட்டாக்கனியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் இரண்டாவது சவாலே நியூசிலாந்தில் பலம் வாய்ந்த வீரர்களை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான்.

கேப்டன் திறமை

கேப்டன் திறமை

பின் ஆலன், மைக்கேல் ப்ராஸ்வெல் டிவோன் கான்வே, கிளன் பிலிப்ஸ், டேரல் மிட்செல் போன்ற வீரர்களை சிக்சர் அடிக்காமல் கட்டுப்படுத்துவது என்பது சுலபமான காரியம் கிடையாது. இப்படி ஒரு எதிரணியை வைத்துக்கொண்டு டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும்போது எவ்வளவு பெரிய இலக்கை அடித்தாலும் அதனை தற்காத்துக் கொள்ள இந்திய அணிக்கு போதாது. இதனால் பில்டர்களை எப்படி நிறுத்துவது எப்படி யுத்திகள் அமைத்து விக்கெட்டுகளை எடுப்பது என்ற ஹர்திக் பாண்டியாவின் முழு கேப்டன் திறமையும் இந்த தொடரில் தெரிந்து விடும்.

இளம் வேகப்பந்துவீச்சாளர்கள்

இளம் வேகப்பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுமே அனுபவம் குறைந்த வீரர்கள் தான். இதில் ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் குறைந்த அளவிலே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்கள். சிவம் மவி பொருத்தவரை இலங்கைக்கு எதிரான தொடரில் தான் அறிமுகமே ஆனார். இதனால் இந்த இளம் படையை வைத்து அசுரத்தனமான வீரர்களை ஹர்திக் பாண்டியா எப்படி எதிர் கொள்வார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் பெரிய சவாலே அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது தான்.

உடல்தகுதி

உடல்தகுதி

இதனால், அவருடைய உடல் தகுதி எந்த அளவுக்கு இருக்கும் என்று நியூசிலாந்து தொடரில் தெரிந்துவிடும். முக்கிய கட்டத்தில் பந்து வீச கூடிய சூழலும் அணிக்கு தேவையான நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டிய பொறுப்பும் பாண்டியாவுக்கு உள்ளது. இந்தத் தொடரில் மட்டும் ஹர்திக் பாண்டியா கலக்கி விட்டால், நிச்சயம் அவர்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக திகழ்வார். ஆனால் அதற்கு உடல் தகுதி மிகவும் முக்கியம். அந்த வகையில் நியூசிலாந்து தொடர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு அக்னி பரிட்சை என்றே சொல்லலாம்.

Story first published: Friday, January 27, 2023, 7:00 [IST]
Other articles published on Jan 27, 2023
English summary
5 Challenges ahead for Hardik Pandya as captain in NZ t20 series ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமா குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X