For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடக்கடவுளே....! பஞ்சாப் அணியிடம் தோற்ற டெல்லி அணிக்கு இப்படி ஒரு சாதனையா...?

Recommended Video

IPL 2019: Delhi worst record | பஞ்சாப் அணியிடம் தோற்ற டெல்லி அணிக்கு இப்படி ஒரு சாதனையா...?- வீடியோ

சண்டிகர்:பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டுகளை இழந்து சாதனை படைத்துள்ளனர்.

ஐபிஎல் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மில்லர் 43 ரன்கள், சர்பராஸ் கான் 39 ரன்கள் எடுத்தனர். மந்தீப் சிங் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சூப்பர் பெளலிங்.. சாம் ஹாட்ரிக்.. கெயில் இல்லாமல் வென்ற பஞ்சாப்! மட்டமாக பேட்டிங் செய்த டெல்லி!! சூப்பர் பெளலிங்.. சாம் ஹாட்ரிக்.. கெயில் இல்லாமல் வென்ற பஞ்சாப்! மட்டமாக பேட்டிங் செய்த டெல்லி!!

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

அதன்பின்னர், 167 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் தவான் நிதானமாக விளையாடினார்.

61 ரன்கள்

61 ரன்கள்

அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 61 ரன்களை குவித்தது. 16.4 ஓவரில் 144 ரன்கள் எடுத்திருந்த போது டெல்லி அணியின் ரிஷப் பண்ட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

டெல்லி ஆல் அவுட்

டெல்லி ஆல் அவுட்

அதன்பிறகு களத்துக்கு வந்த டெல்லி வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் டெல்லி அணி பறிகொடுத்தது.

வெற்றியை இழந்தது

வெற்றியை இழந்தது

இதனையடுத்து, பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற வேண்டிய மேட்ச்சை அழகாக கோட்டைவிட்டது டெல்லி அணி. அந்த அணியில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

5 பேர் டக் அவுட்

5 பேர் டக் அவுட்

டெல்லி அணியின் பிரித்விஷா, கிறிஸ் மோரிஸ், ஹர்சல் படேல், ரபாடா, லாமிசேன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியில் ரன் ஏதும் எடுக்காமல் அதிக வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தவர்கள் பட்டியலில் டெல்லி அணி இடம் பிடித்திருக்கிறது.

இதுவும் ஒரு சாதனை

இதுவும் ஒரு சாதனை

முன்னதாக 2011ம் ஆண்டு மும்பை அணியுடனான போட்டியில் இதே போன்றதொரு சாதனைபடைக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது தான்...டெல்லி அணி வீரர்கள் 5 பேர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்திருந்தனர்.

எந்த அணிகள்

எந்த அணிகள்

ரன் ஏதும் எடுக்காமல் அதிக விக்கெட்டை பறிகொடுத்த அணிகள்

ஆண்டு அணி விக்கெட்டுகள் எதிரணி
2011 கொச்சி 6 ஹைதராபாத்
2011 டெல்லி 5 மும்பை
2008 பெங்களூரு 5 பஞ்சாப்
2019 டெல்லி 5 பஞ்சாப்
Story first published: Tuesday, April 2, 2019, 10:25 [IST]
Other articles published on Apr 2, 2019
English summary
5 delhi players who scored nothing against punjab in ipl.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X