For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

களமிறங்கும் பெரும் தலைகள்.. இந்திய அணியை அச்சுறுத்தும் இங்கி, 5 வீரர்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்??

பிர்மிங்கம்: இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 5 பெரும் தலைகள் களமிறங்கியுள்ளன.

இரு அணிகளும் மோதும் 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி பிர்மிங்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி பயிற்சி போட்டியிலும், இங்கிலாந்து அணி நியூசிலாந்து தொடரிலும் சிறப்பாக விளையாடிவிட்டு களம் காணுகின்றனர்.

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி.. வானிலையை கூட பார்க்காமல் பிசிசிஐ போட்டி நடத்துவது ஏன்- முழு விவரம்விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி.. வானிலையை கூட பார்க்காமல் பிசிசிஐ போட்டி நடத்துவது ஏன்- முழு விவரம்

இந்திய அணியில் குழப்பம்

இந்திய அணியில் குழப்பம்

இந்திய அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. இதுமட்டுமல்லாமல் புஜாரா, ஹனுமா விஹாரி, கே எஸ் பரத், உமேஷ் யாதவ் என ப்ளேயிங் 11ல் பெரிய குழப்பங்கள் நீடித்து வருகிறது.

இங்கிலாந்து படை

இங்கிலாந்து படை

இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பெரும் தலைகள் களமிறங்கியுள்ளன. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜானி பேர்ஸ்டோ, ஜாக் லீச், ஜோ ரூட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து உடனான போட்டியில் படு சிறப்பான ஃபார்மில் இருந்தவர்கள் ஆகும்.

அதிவேக அரைசதம்

அதிவேக அரைசதம்

நியூசிலாந்துடனான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி 55 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. எனினும் ஜானி பேர்ஸ்டோ 157 பந்துகளில் 162 ரன்களை அதிரடியாக குவித்து அணியை மீட்ட்டார். இதே போல 2வது இன்னிங்ஸில் வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றி பெற்றுக்கொடுத்தார்.

அட்டகாச ரன் விகிதம்

அட்டகாச ரன் விகிதம்

இதே போல 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஜோ ரூட் தான் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 3 போட்டிகளில் அவர் 396 ரன்களை குவித்தார். அவரின் சராசரி மட்டுமே 99 ரன்கள் ஆகும். இவர்களை கடந்தாலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங், பேட்டிங் என பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்.

பவுலிங் அச்சுறுத்தல்

பவுலிங் அச்சுறுத்தல்

பந்துவீச்சை பொறுத்தவரையில் இந்திய அணிக்கு எப்போதுமே ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் எதிரிகள் தான். குறிப்பாக இந்தியாவின் தூணாக பார்க்கப்படும் விராட் கோலியின் வீக்னஸை ஆண்டர்சன் நன்கு அறிந்தவர். இவர்கள் இருவருடன் சேர்ந்து தற்போது ஜாக் லீச்சும் நல்ல ஃபார்மில் இருப்பதால் அசுர பலத்தில் இங்கிலாந்து உள்ளது.

Story first published: Tuesday, June 28, 2022, 16:54 [IST]
Other articles published on Jun 28, 2022
English summary
India vs England 5th Test ( இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்ட் ) இங்கிலாந்துடனான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 5 வீரர்கள் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X