For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'இது தான் கடைசி சான்ஸ்..' தலை மீது தொங்கும் கத்தி.. இந்த 5 இந்திய வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்?

டெல்லி: நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் அணியில் உள்ள சில மூத்த வீரர்களுக்கு பெரும் சாவாலான தொடர் தான். அடுத்தடுத்து இளம் வீரர்கள் வரிசை கட்டி நிற்பதால் இந்தத் தொடரில் மூத்த வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியே தீர வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது எப்போது என யாருக்கும் தெரியாது.

டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்ததால், தனது கேப்டன்சியை கோலியால் வெற்றிகரமாக முடிக்க முடியுமா என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இருப்பினும், இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. சூப்பர் 12 சுற்றில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்த இந்தியா அத்துடன் வெளியேறியது.

 நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

உலகக் கோப்பையில் பெற்ற படுதோல்விக்குப் பிறகு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்குத் தயாராகி வருகிறது இந்தியா. வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கோலி, பும்ரா, ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியின் புதிய கேப்டனாக ரேஹித் சர்மாவும் துணை கேப்டனாக கே எல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

முழு நேர கேப்டனாக ரேஹித் சர்மாவுக்கு இது முதல் தொடர் என்பதால் பெரும் சவாலாக இருக்கும். அவருக்கு மட்டுமின்றி அணியில் உள்ள சில மூத்த வீரர்களும் இது பெரும் சாவாலான தொடர் தான். அடுத்தடுத்து இளம் வீரர்கள் வரிசை கட்டி நிற்பதால் இந்தத் தொடரில் மூத்த வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியே தீர வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது எப்போது என யாருக்கும் தெரியாது.

 புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் குமார்

இதில் முதல் இடத்தில் உள்ளவர் புவனேஷ்வர் குமார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் மிகச் சிறந்த ஓப்பனிங் பவுலர்களில் ஒருவராக இருந்த புவனேஷ்வர் குமாருக்கு, 2021 சிறப்பாக அமையவில்லை. இந்த ஆண்டும் கூட காயமும் ஃபிட்னஸும் தான் அவரது வில்லனாக மாறியது. 31 வயதான புவனேஷ்வர் குமார், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கா விளையாடி 11 போட்டிகளில் வெறும் 6 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். டி20 உலகக் கோப்பையிலும் இதே நிலை தான் தொடர்ந்தது. இந்தச் சூழலில் புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 வரிசை கட்டி நிற்கும் இளம் புயல்கள்

வரிசை கட்டி நிற்கும் இளம் புயல்கள்

தீபக் சாஹர் தொடங்கி முகமது சிராஜ், அவேஷ் கான், ஹர்ஷல் படேல் பல இளம் வீரர்கள் அடுத்துக் காத்திருப்பதால், மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினால் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே. டெயில் ஹேன்டராக பேட்டிங்கும் செய்யும் ஷர்துல் தாகூருக்கும் கூட வாய்ப்பு அளிக்கப்படலாம். அல்லது பவர்பிளேயிலும், டெத் ஓவர்களிலும் பல வெரியேஷன்களை காட்டும் அவேஷ் கானுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம்.

 அக்சர் படேல்

அக்சர் படேல்

அக்சர் படேலைப் பொறுத்தவரை, 2021 அவருக்குச் சிறப்பான ஆண்டாகவே அமைந்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது சிறப்பான ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து அப்படியே ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடத் தொடங்கினார். அந்த சமயத்தில் ரவீந்திர ஜடேஜாவும் காயத்தில் இருந்ததால் அக்சர் சிறந்த மாற்று வீரராக இருந்தார். ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணிக்காகக் களமிறங்கிய அவர் 12 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்படிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் அவருக்கு வரும் காலத்தில் அணியில் நிரந்தர இடம் இருக்குமா என உறுதியாகக் கூற முடியாத நிலையே உள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கு முக்கிய காரணம் ரவீந்திர ஜடேஜா தான். தனது உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் ஜடேஜா பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கக்கி வருகிறார். அதேபோல வாஷிங்டன் சுந்தரும் ஒரு நாள் போட்டிகளில் அக்சருக்கு கடும் போட்டியைத் தருவார். போதாக் குறைக்கு தற்போது ​​வெங்கடேஷ் ஐயரும் சிறப்பாக விளையாடுவதால் அக்சர் பட்டேலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என உறுதியாகக் கூற முடியவில்லை.இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அணியில் தொடர முடியும்.

 அஜின்க்யா ரகானே

அஜின்க்யா ரகானே

மூத்த வீரரான அஜின்க்யா ரகானேவுக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவரது சராசரி வெறும் 15ஆக மட்டுமே இருந்தது. இதனால் இந்த போட்டியில் சிறப்பான இடத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றால் ரகானே இடமும் கேள்விக்குறி தான்.

 யார் மாற்று

யார் மாற்று

ரோகித் ஷர்மாவுக்கு டெஸ்ட் தொடரில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க ஐசிசி விரும்புக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரகானேவின் இடம் ரோகித்துக்கு செல்லாம். அல்லது ஹனுமான் விஹாரி, சுப்மான் கில் போன்ற வீரர்களும் அடுத்துக் காத்திருக்கின்றனர்.

 விருத்திமான் சாஹா

விருத்திமான் சாஹா

விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கும் இது வாழ்வா சாவா தொடர் தான். தோனி ஓய்வு பெற்றதிலிருந்து, அவருக்கான சிறந்து மாற்று வீரராக சாஹா கருகப்பட்டார். ஏற்கனவே ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இவரது இடத்தை ரிஷப் பந்த் நிரப்பிவிட்டார். எனவே, நியூசிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் டெஸ்ட் போட்டியிலும் அவரது இடத்தை இழக்க நேரிடும்.

 கே.எஸ்.பரத்

கே.எஸ்.பரத்

இந்த டெஸ்ட் தொடரிலேயே ஆந்திராவைச் சேர்ந்த 28 வயதான கே.எஸ்.பரத்தும் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து தொடரில் சாஹாவுக்கு தான் வாய்ப்பு என்றாலும் கூட, அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் கே.எஸ்.பரத் தான் அடுத்த ஆப்ஷன். நியூசிலாந்து தொடரில் சாஹா எப்படி விளையாடுகிறார் என்பதே அணியில் அவரது எதிர்காலத்தை முடிவு செய்யும்.

அஸ்வின்

அஸ்வின்

ஒரு நாள் மற்றும் டி20 அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு இடம் கிடைப்பது கடினம் தான். ஏற்கனவே அவர் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தே அணியில் ஓரங்கட்டப்பட்டார். 2021 டி20 உலகக் கோப்பைக்கு அவர் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் அஸ்வின் ஒரு சிறந்த வீரராக இருந்த போதிலும், இந்திய அணியில் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை. வாஷிங்டன் சுந்தர் காயமடைந்துள்ளதாலேயே தான் டி20 உலகக்கோப்பையில் கூட அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

 பலம் என்ன

பலம் என்ன

எனவே சுந்தர் காயத்திலிருந்து மீண்டால் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்புகள் கிடைப்பது கடினம் தான். மேலும், ராகுல் சாஹர் மற்றும் சாஹல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் தாயாராக இருப்பதால் அஸ்வின் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இது போக சக தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியும் அஸ்வினுக்கு கடும் போட்டி தருகிறார். இருப்பினும், தொடர்ந்து சீரான ஃபர்பாமன்ஸை வெளிப்படுத்துவது அஸ்வினின் பலம். அதை இந்த தொடரிலும் வெளிப்படுத்துவாரா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்

Story first published: Saturday, November 13, 2021, 20:16 [IST]
Other articles published on Nov 13, 2021
English summary
5 Indian players for whom the New Zealand series might be last chance.India vs New Zealand series latest updates in tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X