For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC World Cup:அபாரமாக ஆடியும் உலக கோப்பையில் தோற்ற அணிகள்..!! ஒரு சின்ன ப்ளாஷ்பேக்..!!

லண்டன்:உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வந்தேவிட்டது. ரசிகர்களும் குதூகலமாகி விட்டனர். ஆனால், கடந்த கால உலக கோப்பை தொடரில் அணியின் நட்சத்திர வீரர்கள் சிறப்பாக ஆடியும் அந்த அணிகள் தோற்ற வரலாறு உண்டு. அதை பற்றி பார்ப்போம்.

உலக கோப்பை வரலாற்றில் பெரிதும் பேசப்படும் போட்டி இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2011ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற ஆட்டம் தான். அதிலும் சச்சினின் ஆட்டம் அபாரம். டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பெருத்த எதிர்பார்ப்புகளுடன் களம் இறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக சேவாக்கும், சச்சினும் ஆடினர். அதிரடி மன்னர் சேவாக் 73 ரன்கள் குவித்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்த்த ரன்கள் 142. சேவாக் வெளியேறியதும், கம்பீருடன் கை கோர்த்தார் சச்சின்.

விஜய் ஷங்கரை அடுத்து.. ஹர்திக் பண்டியாவுக்கு காயம்? பதற்றத்தில் இந்திய அணி.. ரசிகர்கள் கவலை!! விஜய் ஷங்கரை அடுத்து.. ஹர்திக் பண்டியாவுக்கு காயம்? பதற்றத்தில் இந்திய அணி.. ரசிகர்கள் கவலை!!

இந்தியா 296 ரன்கள்

இந்தியா 296 ரன்கள்

இருவரும் 2வது விக்கெட்டுக்கு அபாரமாக ரன் குவித்தனர். 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்தனர். ஸ்கோர் 267 ஆக இருந்த போது தான் விக்கெட் வீழ்ந்தது. இறுதியில் இந்திய அணி 296 ரன்கள் குவித்தது. சச்சின் 111 ரன்கள் அடித்து ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார்.

தென் ஆப்ரிக்கா வெற்றி

தென் ஆப்ரிக்கா வெற்றி

நிச்சயம் இந்தியாவுக்கு தான் வெற்றி என்று நினைத்திருந்த வேளையில் எல்லாம் தலை கீழானது. 2 பந்துகள் மீதம் வைத்த தென் ஆப்ரிக்க அணி 300 ரன்களை எட்டி இந்தியாவை வீழ்த்தியது. 5 விக்கெட்டுகள் எடுத்த தென் ஆப்ரிக்காவின் பால் ஸ்டெயினுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. மொத்தத்தில் சச்சினின் சதம் இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை.

2011 இறுதிப்போட்டி

2011 இறுதிப்போட்டி

இந்த போட்டியும் அதே 2011ம் ஆண்டு உலக கோப்பையில் மும்பையில் நடைபெற்றது. இந்தியாவும், இலங்கையும் மோதின. இது உலக கோப்பை இறுதி போட்டியாகும். இலங்கை முதலில் விளையாடியது. 6 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் குவித்தது. ஜெயவர்த்தனே 88 பந்துகளில் 103 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், அந்த ஆட்டத்தில் இந்தியா வென்று சாம்பியனானது. ஏமாற்றம் அடைந்தார் ஜெயவர்த்தனே.

236 ரன்கள் டார்கெட்

236 ரன்கள் டார்கெட்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு... 1992ம் ஆண்டு. பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆட்டம். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, மழையின் குறுக்கீடுக்கு இடையே 237 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக இந்திய அணிக்கு 47 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. டார்கெட் 236.

அசாரூதினின் சதம்

அசாரூதினின் சதம்

ஆனால், நடந்ததோ வேறு. அசாரூதினின் 102 ரன்கள் வீணாகி போனது. ஒரு வழியாக, 1 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது. அபாரமாக ஆடிய டீன் ஜோன்ஸ் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக கோப்பை போட்டி தொடரில் அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாத போட்டி.

120 ரன்கள் எடுத்த ஜெயசூர்யா

120 ரன்கள் எடுத்த ஜெயசூர்யா

2003ம் ஆண்டு இலங்கையும், நியூசிலாந்தும் மோதின. பிளமிங் டாஸ் வென்று இலங்கையை பேட் செய்ய அழைத்தார். ஜெயசூர்யா அபாரமாக ஆடி 120 ரன்கள் குவித்தார். இலங்கை 272 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து, 15 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

141 ரன்கள்

141 ரன்கள்

அதன் பின்னர் 4வது விக்கெட்டுக்கு வந்த ஸ்காட் ஸ்டைரிஸ் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அபாரமாக ஆடினார். 125 பந்துகளில் அவர் எடுத்த 141 ரன்கள் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், கதையே வேறானது. பின்வரிசை வீரர்கள் சொதப்ப இலங்கை 47 ரன்களில் வென்றது. ஸ்டைரிஸ் சதம் வீணானது.

லார்ட்ஸ் போட்டி

லார்ட்ஸ் போட்டி

1999ம் ஆண்டு. கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் அவ்வப்பொழுது வந்த செல்லும் போட்டி இது. லார்ட்ஸ் சூப்பர் சிக்ஸ் மேட்சில் ஜிம்பாப்வே அணியும், ஆஸ்திரேலியாவும் மோதின. ஆஸ்திரேலியா 303 ரன்கள் குவித்தது. மார்க் வாக் 104 ரன்களும், ஸ்டீவ் வாக் 62 ரன்களும் எடுத்தனர்.

ஆட்ட நாயகன் ஜான்சன்

ஆட்ட நாயகன் ஜான்சன்

அடுத்து ஆட வந்த ஜிம்பாப்வே யாரும் எதிர்பாராத வகையில் அற்புதமாக ஆடி தள்ளியது. தொடக்க வீரர் நீல் ஜான்சன், ஆஸி. பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் குவித்தார். ஆனால்... அந்த போட்டியில் ஆஸ்திரேலியா 44 ரன்களில் வெற்றி பெற்றது. சதம் அடித்தும் ஜிம்பாப்வே அணியால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால் மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்றார் நீல் ஜான்சன்.

Story first published: Tuesday, May 28, 2019, 19:43 [IST]
Other articles published on May 28, 2019
English summary
5 knock out matches that went in vain World Cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X