For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் வெற்றி அவ்வளவு எளிதல்ல பாகிஸ்தான் அணியின் அசைக்க முடியாத 4 வீரர்கள்..பலம், பலவீனம் என்ன?

அமீரகம்: பாகிஸ்தான் அணியை வீழ்த்த 5 முக்கிய வீரர்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரும் சூப்பர் 12 போட்டிகள் வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் தொடங்குகிறது. தற்போது தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்திய அணிக்கு முதல் போட்டியாக வரும் அக்டோபர் 24ம் தேதியன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாயில் நடைபெறவுள்ளது.

“உங்க வாய்தான் உங்களுக்கு எமன்” வெற்றி உறுதி எனக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த சேவாக் “உங்க வாய்தான் உங்களுக்கு எமன்” வெற்றி உறுதி எனக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த சேவாக்

இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்

இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்

உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணியை ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி வென்றதில்லை. டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இதுவரை 6 முறை மோதி அனைத்திலும் இந்திய அணி வெற்றிக் கண்டுள்ளது. இதனால் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. பாகிஸ்தானின் 2வது ஹோம் கிரவுண்டாக அமீரக களங்கள் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இதனால் இந்திய அணிக்கு சற்று சிரமம் இருக்கலாம். இந்நிலையில் பாகிஸ்தானில் இருக்கும் 5 வீரர்களை சமாளித்துவிட்டால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிடும்.

பாகிஸ்தானின் முதுகெலும்பு

பாகிஸ்தானின் முதுகெலும்பு

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் தூணாக இருப்பது கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகும். இவர்களின் பிரிக்க முடியாத பார்ட்னர்ஷிப் பல்வேறு போட்டிகளில் பாகிஸ்தானுக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளது. 2021ம் ஆண்டில் மட்டும் பாபர் அசாம் இதுவரை 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 523 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 4 அரைசதங்களும் அடங்கும். அவரின் சராசரி 132.74 ஆக உள்ளது. இதே போல முகமது ரிஸ்வான் இந்தாண்டு 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 367 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும்.

பயமுறுத்தும் பார்ட்னர்ஷிப்

பயமுறுத்தும் பார்ட்னர்ஷிப்

இதே போல இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் அசைக்க முடியாததாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை 15 இன்னிங்ஸ்களில் ஜோடி சேர்ந்துள்ள இவர்கள் 829 ரன்கள் குவித்துள்ளனர். இதில் 3 முறை 100 ரன் பார்ட்னர்ஷிப் மற்றும் 3 முறை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாகும். எனவே இவர்களை பிரித்தால் மட்டுமே இந்திய அணியால் பாகிஸ்தானின் ரன்களை கட்டுப்படுத்த முடியும்.

மிடில் ஆர்டர் அச்சுறுத்தல்

மிடில் ஆர்டர் அச்சுறுத்தல்

பாகிஸ்தானின் சீனியர் வீரரான சோயிப் மாலிக் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளார். டி20 போட்டிகளை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிராக 8 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த முறை இந்தியாவை பழிவாங்க கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் கடந்த 2 ஆண்டுகளில் இவர் 8 சர்வதேச டி20க்களில் மட்டுமே ஆடியிருப்பதால் இந்தியாவுக்கு சற்று நிம்மதியாக இருக்கும்.

சீனியர் வீரர்

சீனியர் வீரர்

ஆல்ரவுண்டராக சீனியர் வீரர் முகமது ஹஃபீஸும் இந்தியாவுக்கு தலைவலி கொடுக்கக்கூடியவர். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 113 டி20க்களில் 2400 ரன்களுக்கும் மேல் அடித்துள்ள இவர் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக மட்டும் 7 போட்டிகளில் 156 ரன்கள் விளாசியுள்ளார். இவரின் தற்போதைய ஃபார்ம் அச்சுறுத்தும் விதமாக உள்ளது. கடந்த 10 டி20 போட்டிகளில் 415 ரன்கள் குவித்துள்ளார். இவரின் சராசரி 83 ரன்கள் என அசுரத்தனமாக உள்ளது.

சாஹீன் அஃப்ரிடி

சாஹீன் அஃப்ரிடி

பந்துவீச்சை பொறுத்தவரை இளம் வீரர் சாஹீன் அஃப்ரிடி அச்சுறுத்துகிறார். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இதுவரை 28 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சாஹீன் அஃப்ரிடி 53 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரின் எகனாமி ரேட் வெறும் 5.52 தான். பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் கூட அவரின் எகனாமி 8 என்ற நிலையிலேயே தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 21, 2021, 17:50 [IST]
Other articles published on Oct 21, 2021
English summary
5 Pakistan Players, who give trouble to India in T20 worldcup, wil India face that?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X