For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 6வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.

முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்த நிலையில், அடுத்ததாக எஸ்ஆர்எச் அணி இலக்கை துரத்தி வருகிறது.

இந்நிலையில் ஆர்சிபியின் இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட க்ளென் மாக்ஸ்வெல் அவர்களது நம்பிக்கையை பொய்யாக்கவில்லை.

ஆர்சிபி -எஸ்ஆர்எச்

ஆர்சிபி -எஸ்ஆர்எச்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்எச் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அணியில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 33 ரன்களை அடித்திருந்தார்.

இரு போட்டிகளிலும் அதிரடி

இரு போட்டிகளிலும் அதிரடி

அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில் க்ளென் மாக்ஸ்வெல் மட்டுமே இன்றைய போட்டியில் 41 பந்துகளில் 59 ரன்களை அடித்துள்ளார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸ்கள் அடக்கம். கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் 28 பந்துகளில் 39 ரன்களை அடித்திருந்தார்.

13 போட்டிகள்...108 ரன்கள்

13 போட்டிகள்...108 ரன்கள்

கடந்த ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மாக்ஸ்வெல் சொதப்பினார். 13 போட்டிகளில் விளையாடி 108 ரன்களை அடித்திருந்தார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அவரை ஐபிஎல் ஏலத்தையொட்டி விடுவித்தது.

5 ஆண்டுகளுக்கு பிறகு அரைசதம்

5 ஆண்டுகளுக்கு பிறகு அரைசதம்

இந்நிலையில் அவர் கடந்த 2016க்கு பிறகு இன்றைய போட்டியில்தான் அரைசதம் அடித்துள்ளார். அவர் அரைசதத்தை அடிக்க 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர் சொதப்பலான ஆட்டத்தை கடந்த சீசன்களில் அளித்த போதிலும் அவர்மீது நம்பிக்கை வைத்து ஆர்சிபி அவரை இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு 14.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மாக்ஸ்வெல் அதிரடி

மாக்ஸ்வெல் அதிரடி

ஆனால் அதன் நம்பிக்கையை மாக்ஸ்வெல் பொய்யாக்கவில்லை. முதல் போட்டியில் இருந்தே அவர் தனது அதிரடியை நிரூபித்துள்ளார். இன்றைய போட்டியில் 19வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் அவர் தனது அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து அவரது பந்துவீச்சிலேயே அவுட்டும் ஆகியுள்ளார்.

Story first published: Wednesday, April 14, 2021, 23:01 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
Maxwell purchased by RCB for a sum of ₹14.25 crore at the IPL 2021 auction despite having a poor last season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X