For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

500 மாற்றுத் திறனாளி கிரிக்கெட் ரசிகர்கள்... இன்றைய போட்டிக்கு இலவச பாஸ்... ஜெய் ஷா அறிவிப்பு

அகமதாபாத் : இந்தியா -இங்கிலாந்து இடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று துவங்கி நடைபெறவுள்ளது.

அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் முதல் சர்வதேச போட்டியாக இன்றைய போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் 500 மாற்றுத் திறனாளி கிரிக்கெட் ரசிகர்களுக்கு போட்டியை நேரில் கண்டுகளிக்க இலவச பாஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

500 Handicapped cricket Fans has been given a free pass to watch 3rd test Match -Jay Shah

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக இன்று பிற்பகல் துவங்கவுள்ளது. இதில் சமநிலையில் உள்ள இரு அணிகளும் மோதவுள்ளன. அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 55,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் 500 மாற்றுத் திறனாளி கிரிக்கெட் ரசிகர்களுக்கு போட்டியை நேரில் கண்டுகளிக்க இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மைதானத்தில் 4 ட்ரஸ்ஸிங் ரூம்கள் உள்ளதாகவும் ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகளை இடையூறு இன்றி நடத்த முடியும் என்றும் குஜராத் கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் அனில் படேல் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 24, 2021, 22:24 [IST]
Other articles published on Feb 24, 2021
English summary
500 handicapped fans have been given free entry for the third Test -Jay Shah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X