For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துரிதமாக 6000 ரன்கள் குவித்தவர்கள் லிஸ்ட்டில் "கடவுள்" இல்லை!

சென்னை: ஒரு நாள் போட்டிகளில் துரிதமாக 6000 ரன்கள் குவித்த டாப் 10 வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் இல்லை. இந்தியாவைச் சேர்ந்தவர்களில் கோஹ்லியும், கங்குலியும் மட்டுமே உள்ளனர்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் துரித கதியில் 6000 ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையை அம்லா நேற்று பெற்றார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இருந்து வந்த சாதனையை அவர் நேற்று முறியடித்தார்.

இந்த சாதனை இதுவரை கோஹ்லியிடம் இருந்து வந்தது. தற்போது அது அம்லாவிடம் போய் விட்டது.

1-ம் 10ம் தென் ஆப்பிரிக்காவே

1-ம் 10ம் தென் ஆப்பிரிக்காவே

தற்போது துரிதகதியில் 6000 ரன்களைக் குவித்த டாப் 10 வீரர்களில் முதலிடத்திலும், கடைசி இடத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்களே உள்ளனர். 10வது இடத்தில் இருப்பவர் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் ஆவார்.

123 இன்னிங்ஸ்களில்

123 இன்னிங்ஸ்களில்

ஹசிம் அம்லா தனது 123வது இன்னிங்ஸில் 6000 ரன்களைத் தொட்டு சாதனை படைத்துள்ளார். இது மிகப் பெரிய சாதனையுமாகும். விளையாட வந்து 7 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் இந்த சாதனையை அவர் செய்துள்ளார்.

2வது இடத்தில் கோஹ்லி

2வது இடத்தில் கோஹ்லி

2வது இடத்தில் இருக்கும் விராத் கோஹ்லி 136 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களைக் கடந்தார். விளையாட வந்து 6 வருடம் 83 நாட்களில் இந்த சாதனையை அவர் செய்திருந்தார்.

3வது இடத்தில் ரிச்சர்ட்ஸ்

3வது இடத்தில் ரிச்சர்ட்ஸ்

மேற்கு இந்தியத் தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கடந்த 1989ம் ஆண்டு 141 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களைக் கடந்திருந்தார். அந்த சாதனை நீண்ட காலமாக உடைக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கங்குலி

கங்குலி

இந்திய வீரர்களில் கங்குலி 147 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களைக் குவித்திருந்தார். அதேபோல ஆப் டிவிட்டிலியர்ஸும் இதே அளவிலான இன்னிங்ஸ்களில் 6000 ரன்களைக் குவித்துள்ளார்.

ஹெய்டன்

ஹெய்டன்

ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹெய்டன் 154 இன்னிங்ஸ்களிலும், பிரையன் லாரா 155 இன்னிங்ஸ்களிலும், டீன் ஜோன்ஸ் 157 இன்னிங்ஸ்களிலும் 6000 ரன்கள் குவித்துள்ளனர்.

சச்சின் இல்லை

சச்சின் இல்லை

இந்த டாப் 10 பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் இல்லை என்பது ஆச்சரியகரமானது.

Story first published: Monday, October 26, 2015, 10:40 [IST]
Other articles published on Oct 26, 2015
English summary
Amla is leading the 6000 runs club and in the Top 10 list our cricket 'God' Sachin's name is missing.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X