For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிவிட்டரில் திடீரென டிரெண்டாகும் 63 நாட் அவுட்.. காரணம் என்ன??

சிட்னி: சமூக வலைத்தளத்தில் இன்று காலை முதலில் இருந்தே 63 நாட் அவுட் என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது. சிலர் இதனை மறந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் மனதை விட்டு இந்த நிகழ்வு என்றும் நீங்காது

Recommended Video

Philip Hughesக்காக Trend ஆகும் #63NotOut | OneIndia Tamil

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் காலமான நாள் தான் இன்று கிரிக்கெட்டே பார்க்காதவர்கள், கிரிக்கெட் பற்றியே தெரியாதவர்கள் கூட பிலிப் ஹியூஸ்காக பிரார்த்தனை செய்தனர்.

ஆனால், அத்தனை பேரின் பிரார்த்தனையையும் பொய்யாக்கி, இந்த மண் உலகை விட்டு 7 ஆண்டுகளுக்கு முன் பிரிந்தார் பிலிப் ஹியூஸ்

நாதஸ் திருந்திட்டான்.. யார் சொன்னா.?.அவனே சொன்னான்..! பார்மி ஆர்மிக்கு குவியும் பாராட்டு..!!நாதஸ் திருந்திட்டான்.. யார் சொன்னா.?.அவனே சொன்னான்..! பார்மி ஆர்மிக்கு குவியும் பாராட்டு..!!

தாக்கிய பந்து

தாக்கிய பந்து

கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உள்ளுர் கிரிக்கெட் போட்டியில் போது சென் அபார்ட் வீசிய பந்து பவுன்ஸ் ஆனது. அப்போது பந்தை லீவ் செய்ய பிலிப் ஹியூஸ் முயன்ற போது, அவரின் பின் கழுத்தில் பந்து பட்டது. இதில் நிலைக்குலைந்து போன ஹியூஸ், அப்படியே மைதானத்தில் மயங்கி விழுந்தார்.

காலமானார்

காலமானார்

உடனடியாக எதிரணியில் இருந்த வார்னர் உள்ளிட்ட வீரர்கள் பிலிப் ஹியூஸை மைதானத்திலிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவர் மூளைக்கு செல்ல வேண்டிய நிரம்பு காயமடைந்ததால், அவர் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை மேற்கொண்டும், 2 நாளாக கண் விழிக்காமல் இருந்த பிலிப் ஹியூஸ் நவம்பர் 27ஆம் தேதி காலமானார்

இறுதிச்சடங்கு

இறுதிச்சடங்கு

பிலிப் ஹியூஸ் மரண செய்தியை கேட்டு அப்போதையே ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கதறி அழுதார். அப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தது. பிலிப் ஹியூசின் இறுதிச் சடங்கில் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்றனர். 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, கோப்பையை பிலிப் ஹியூஸுக்கு சமர்பித்தது

63 நாட்அவுட்

63 நாட்அவுட்

பிலிப் ஹியூஸ் உயிரிழக்கும் போது அவர் எடுத்திருந்த ஸ்கோர் 63., இனி அவர் ஆட்டமிழக்கவே வாய்ப்பில்லை.இதனால் தான் 63 நாட் அவுட் என்ற வார்த்தை ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கவில்லை. பிலிப் ஹியூஸ் உருவப்படம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிலிப் ஹியூஸ் மரணத்திற்கு பிறகு ஹெல்மெட்டில் பல மாற்றம் கொண்டு வரப்பட்டு வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. பந்து வீரர்கள் தலையில் பட்டால், உடனடியாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, அவர் சரியாக இருக்கிறாரா என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகே ஆட்டம் மிண்டும் தொடங்கப்படும் என்ற விதி கொண்டு வரப்பட்டது. 7 ஆண்டுகள் அல்ல, 700 ஆண்டுகள் ஆனாலும் பிலிப் 'ஹியூஸ் கிரிக்கெட் இருக்கும் வரை வாழ்வார்.

Story first published: Saturday, November 27, 2021, 16:47 [IST]
Other articles published on Nov 27, 2021
English summary
Cricket Fans all over the world remembers Philip Hughes on his 7th Death anniversary. 63 Not out trending in social Network..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X