80 வயது ரசிகருக்கு பரிசு - ஆஸ்திரேலிய கோச்சுக்கு குவியும் பாராட்டு

சிட்னி: ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், காட்டுத்தீயால் தனது வீடுகளை இழந்த 80 வயது கிரிக்கெட் ரசிகருக்கு பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சிட்னியில் நியூசிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி நாளை துவங்கவுள்ளது. இதையடுத்து ஜஸ்டின் லாங்கர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, 80 வயது பில் டீனுக்கு தன்னுடைய பயிற்சி கேப்பை ஜஸ்டின் லாங்கர் பரிசளித்துள்ளார். இந்த சம்பவம் தன்னுடைய வாழ்நாளை மேலும் கூட்டியுள்ளதாக அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா நிச்சயதார்த்தம்... வாழ்த்து மழையில் நனையவிட்ட பிரபலங்கள்

10க்கும் மேற்பட்டோர் பலி

10க்கும் மேற்பட்டோர் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை முதல் காட்டுத்தீ பற்றியுள்ள நிலையில், இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குடியிருப்புவாசிகள் பரிதவிப்பு

குடியிருப்புவாசிகள் பரிதவிப்பு

இந்தக் காட்டுத்தீயில் சிக்கி 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் வீடு மற்றும் உடமைகளை இழந்து ஆயிரக்கணக்கானோர் வாடி வருகின்றனர்.

பயிற்சியாளர் லாங்கர் வருத்தம்

பயிற்சியாளர் லாங்கர் வருத்தம்

இந்த காட்டுத்தீயில் தன்னுடைய வீட்டை இழந்து 80 வயது முதியவர் பில் டீன் பரிதவித்து வருகிறார். வீல் சேரில் வாசம் செய்யும் இவருக்காக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் லாங்கரின் செயல்பாடு

ஜஸ்டின் லாங்கரின் செயல்பாடு

முதியவர் பில் டீனுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தன்னுடைய பயிற்சி கேப்பை பரிசளித்துள்ளார். இந்த செயல்பாடு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

முதியவர் பில் டீன் நன்றி

முதியவர் பில் டீன் நன்றி

ஜஸ்டின் லாங்கரின் இந்த பரிசு காட்டுத்தீயால் பரிதவித்துவரும் தன்னுடைய ஆயுளை கூட்டியுள்ளதாக அந்த முதியவர் பில் டீன் நன்றி தெரிவித்துள்ளார்.

பில் டீன் பாராட்டு

பில் டீன் பாராட்டு

குழந்தையோ அல்லது முதியவரோ, அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்க இத்தகைய செயல்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருவது குறித்தும் டீன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டி நடைபெறுமா?

சிட்னியில் காட்டுத்தீயால் காற்றின் தரம் குறைந்துள்ள நிலையில், நாளை துவங்கவுள்ள நியூசிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜஸ்டின் லாங்கர் கோரிக்கை

ஜஸ்டின் லாங்கர் கோரிக்கை

இதனிடையே, காற்றின் தரம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அந்தப்பகுதியில் மழை பெய்ய வேண்டும் என்றும் அதுவும் போட்டிக்கு இடையூறு இல்லாமல் இரவு நேரங்களில் பெய்ய வேண்டும் என்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். சிட்னிக்கு இதுதான் முதல் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Justin Langer gifts 80 year old Cricket Fan his Training Cap
Story first published: Thursday, January 2, 2020, 12:52 [IST]
Other articles published on Jan 2, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X