அச்சு அசல் ஸ்ரீகாந்த் ஆக மாறிய நடிகர் ஜீவா.. “83” போஸ்டருக்கு லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்!

சென்னை : 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கபில் தேவ் தலைமையில் உலகக்கோப்பை வென்றது.

அந்த உலகக்கோப்பை வெற்றியை பாலிவுட்டில் "83" என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கபில் தேவ் வேடத்தில் நடிக்கிறார். தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

ரன்வீர் சிங் போஸ்டர்

ரன்வீர் சிங் போஸ்டர்

கடந்த சில மாதம் முன்பு ரன்வீர் சிங், கபில் தேவ் போல போஸ் கொடுக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதைக் கண்ட பலரும் ரன்வீர் சிங், அப்படியே கபில் தேவ் போல இருப்பதாக கூறி பாராட்டினர்.

ஜீவா போஸ்டர்

ஜீவா போஸ்டர்

அதே போல, தற்போது நடிகர் ஜீவா ஸ்ரீகாந்த் பேட்டிங் செய்வது போல போஸ் கொடுத்து இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரும் பெரும் அளவில் பாராட்டைப் பெற்று வருகிறது.

ஏழு லட்சம் லைக்ஸ்

இன்ஸ்டாகிராமில் சுமார் ஏழு லட்சம் லைக்குகளை தாண்டி உள்ளது ஜீவாவின் போஸ்டர். தமிழ் நடிகர் ஒருவர், பாலிவுட்டில் தயாராகும் முக்கியமான வரலாற்று நிகழ்வை சொல்லும் படத்தில் நடிப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் பேச்சு

விஜய் தேவரகொண்டாவுடன் பேச்சு

ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்க முன்னதாக "அர்ஜுன் ரெட்டி" புகழ் விஜய் தேவரகொண்டாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. எனினும், பின்னர் ஜீவா ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

நடிகர்கள் பட்டியல்

நடிகர்கள் பட்டியல்

இந்த திரைப்படத்தில் 1983 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற மற்ற கிரிக்கெட் வீரர்களின் வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் பாலிவுட் நடிகர்களே அதில் இடம் பெற்றுள்ளனர்.

மற்ற நடிகர்கள் யார்?

மற்ற நடிகர்கள் யார்?

கவாஸ்கர் ஆக தாஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானி ஆக சாஹில் கட்டார், பல்விந்தர் சிங் ஆக அம்மி விரிக், மொஹிந்தர் அமர்நாத் ஆக சாகிப் சலீம், வெங்க் சர்க்கார் ஆக ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி ஆக தாரியா கர்வா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.

கபில் தேவ் மகள்

கபில் தேவ் மகள்

83 திரைப்படத்தை கபீர் கான் இயக்கி வருகிறார். இதில் மற்றொரு சுவாரசியமாக, கபில் தேவ்வின் மகள் அமியா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் படங்கள்

கிரிக்கெட் படங்கள்

தோனி, சச்சின் போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 1983 உலகக்கோப்பை வெற்றி குறித்த திரைப்படமும் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
83 world cup movie : Jeeva playing as Srikanth poster released. That poster is getting huge likes.
Story first published: Monday, January 13, 2020, 12:48 [IST]
Other articles published on Jan 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X