For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL மினி ஏலம்.. 991 வீரர்கள் ஏலத்தில் போட்டியிட பெயர் கொடுத்தனர்.. எந்த நாட்டிலிருந்து எத்தனை பேர்?

மும்பை : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.இதில் மொத்தம் 185 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள்.

786 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறாத வீரர்கள். இதில் கத்துக்குட்டி நாடுகளை சேர்ந்த 20 பேர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.

கின்னஸ் உலக சாதனை படைத்த பிசிசிஐ.. ஐபிஎல் போட்டியின் மூலம் கிடைத்த பெருமிதம்.. எதற்காக கிடைத்தது? கின்னஸ் உலக சாதனை படைத்த பிசிசிஐ.. ஐபிஎல் போட்டியின் மூலம் கிடைத்த பெருமிதம்.. எதற்காக கிடைத்தது?

சர்வதேச வீரர்கள்

சர்வதேச வீரர்கள்

இதில் இந்தியாவை சேர்ந்த 19 சர்வதேச வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை கொடுத்திருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 166 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற உள்ளனர். இதை போன்று சர்வதேச அனுபவம் இல்லாத, ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள் 91 பேர் இந்த ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.

604 இந்திய வீரர்கள்

604 இந்திய வீரர்கள்

இதேபோன்று சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாமல் ஏற்கனவே ஐபிஎல் சீசன்களில் பங்கு பெற்ற மூன்று வெளிநாட்டு வீரர்களும் இந்த மினி ஏலத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாத 604 இந்திய வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகாத 88 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெறுகிறார்கள். ஒட்டு மொத்தமாக 277 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெறுகிறார்கள்.

எந்த நாட்டில் எத்தனை பேர்

எந்த நாட்டில் எத்தனை பேர்

இதில் ஆப்கானிஸ்தானில் இருந்து 14 வீரர்களும், ஆஸ்திரேலியாவிலிருந்து 57 வீரர்களும், வங்கதேசத்திலிருந்து ஆறு வீரர்களும், இங்கிலாந்திலிருந்து 31 வீரர்களும் அயர்லாந்தில் இருந்து எட்டு வீரர்களும், நமிபியாவில் இருந்து ஐந்து வீரர்களும் ,நெதர்லாந்தில் இருந்து ஏழு வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 27 வீரர்களும், ஸ்காட்லாந்தில் இருந்து இந்த இரண்டு வீரர்களும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும் ,இலங்கையில் இருந்து 23 வீரர்களும் யூ ஏ யில் இருந்து ஆறு வீரர்களும் மேற்கிந்திய தீவுகளில் இருந்து 33 வீரர்களும் ஜிம்பாப்வேவிலிருந்து ஆறு வீரர்களும் தங்களது பெயரை ஐபிஎல் மினி ஏலத்திற்காக பதிவு செய்திருக்கிறார்கள்.

தேவைப்படும் வீரர்கள்

தேவைப்படும் வீரர்கள்

ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக ஒரு அணியில் 25 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவே சில வீரர்கள் தக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் மொத்தமே அதிகபட்சமாக 87 வீரர்கள் தான் ஐபிஎல் மினி ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள். ஆனால் ஒட்டு மொத்தமாக 991 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற விருப்பம் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எந்த வகையில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

Story first published: Thursday, December 1, 2022, 22:01 [IST]
Other articles published on Dec 1, 2022
English summary
991 Players registered the name for IPL Mini auction - BCCI IPL மினி ஏலம்.. 991 வீரர்கள் ஏலத்தில் போட்டியிட பெயர் கொடுத்தனர்.. எந்த நாட்டிலிருந்து எத்தனை பேர்?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X