For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிந்திக்கக் கூட நேரம் தராமல் பேட்ஸ்மேனை திணறடிக்கக் கூடியவர் ஜாகீர் கான்.. சச்சின் புகழாரம்

டெல்லி: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஜாகீர் கானுக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். கேப்டன் டோணி முதல் "கடவுள்" சச்சின் டெண்டுல்கர் வரை பலரும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.

37 வயதாகும் ஜாகீர்கான் தனது ஓய்வை இன்று அறிவித்தார். காயம் காரணமாகவும், பார்மில் இல்லாததாலும் பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார் ஜாகீர்கான். இந்த நிலையில் இன்று தனது ஓய்வை அறிவித்து விட்டார்.

இந்தியா கண்ட மிகச் சிறந்த வேகப் பந்து வீச்ச்சாளர்களில் ஜாகீர்கானும் ஒருவர். அவர் இந்திய கிரி்கெட்டுக்கு ஆற்றிய சேவையை பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் பாராட்டியுள்ளனர்.

கூல் கூல்

சச்சின் விடுத்துள்ள டிவிட்டில், மிகச் சிறந்த கூலான வேகப் பந்து வீச்சாளர் ஜாகீர் கான். பேட்ஸ்மேன் சிந்திக்கக் கூட நேரம் எடுத்துக் கொள்ளாத வகையில் பிரமாதமாக பந்து வீசக் கூடியவர்.

சவாலுக்கு ரெடி

சவாலுக்கு ரெடி

எப்போதும் சவால்களுக்கு தயாராக இருப்பவர். தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திலும் அவர் சிறந்து விளங்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஓய்வு வாழ்க்கை அவருக்கு சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் சச்சின்.

ரொம்பக் கஷ்டம்

கேப்டன் டோணி விடுத்துள்ள டிவிட்டில், ஜாகீர் கான் இல்லாத டிரஸ்ஸிங் ரூம் நிச்சயம் சோபை இழந்ததாகவே இருக்கும். கஷ்டமான முடிவு இது. அருமையான கிரிக்கெட் பயணத்திற்காக அவருக்கு வாழ்த்துகள். நீங்கள் இல்லாமல் நாங்கள் எதையும் சாதித்திருக்க முடியாது. புத்திசாலியான பந்து வீச்சாளர். இப்போதுதான் அவருக்கு வாழ்க்கை ஆரம்பமாகப் போகிறது. நிச்சயம் இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் தொடர்ந்து பங்காற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார் டோணி.

ஊக்க சக்தி

விராத் கோஹ்லி விடுத்துள்ள டிவிட்டில், எப்போதுமே இளைஞர்களுக்கு உந்து சக்தியாக, ஊக்க சக்தியாக இருப்பவர் ஜாகீர் கான். மிகச் சிறந்த பந்து வீச்சாளர். மாபெரும் மனிதர். எதிர்காலம் பிரகாசமாக அமைய, வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் கோஹ்லி.

ஜென்டில்மேன்

சுரேஷ் ரெய்னா விடுத்துள்ள டிவிட்டில், எப்போதுமே ஜாகீர்கான் ஒரு ஜென்டில்மேன். பெரியண்ணன். மாபெரும் மேதை. புதிய இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்

என்னா ஒரு பவுலர்

ஹர்பஜன் சிங் குறிப்பிடுகையில், என்ன பவுலர் ஜாகீர்கான் நீங்கள். சூப்பர் பவுலர். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். லவ் யூ ஜகீ என்று வாழ்த்தியுள்ளார்.

Story first published: Thursday, October 15, 2015, 16:29 [IST]
Other articles published on Oct 15, 2015
English summary
Iconic Sachin Tendulkar and limited overs captain Mahendra Singh Dhoni today led the bandwagon of former and current cricketers praising Zaheer Khan, who ended his international career today. The 37-year-old Zaheer decided to call time on his international career with immediate effect but will be bidding adieu to the domestic circuit at the end IPL's season 9 next year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X