For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியில் ஒரு இடம் பார்சல்.. டி20 போட்டியில் சிங்கிள் ரன் தராமல் 10 விக்கெட் வீழ்த்திய கில்லி

ராஜஸ்தானில் நடந்த உள்ளூர் போட்டி ஒன்றில் சிறுவன் ஒருவன் ஒரு ரன் கூட கொடுக்காமல் தனி ஆளாக 10 விக்கெட் எடுத்து இருக்கிறான்.

By Shyamsundar

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் சிறுவன் ஒருவன் ஒரு ரன் கூட கொடுக்காமல் தனி ஆளாக 10 விக்கெட் எடுத்து இருக்கிறான்.

இதன் மூலம் அவன் எதிரணியை நான்கு ஓவரில் மொத்தமாக சுருட்டி இருக்கிறான். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளூர் டி-20 போட்டி ஒன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 'திஷா கிரிக்கெட் அகாடமி', 'பியேர்ல் கிரிக்கெட் அகாடமி' ஆகிய இரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பியேர்ல் கிரிக்கெட் அகாடமி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

 அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதையடுத்து முதலில் களம் இறங்கிய திஷா கிரிக்கெட் அகாடமி மிகவும் அதிரடியாக ஆடியது. 20 ஓவர் முடிவில் இந்த அணி 156 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பியேர்ல் கிரிக்கெட் அகாடமி பேட்டிங் பிடிக்க களம் இறங்கியது.

 சிறப்பான பந்து வீச்சு

சிறப்பான பந்து வீச்சு

ஆனால் அந்த அணி தொடக்கத்தில் இருந்து திணற தொடங்கியது. திஷா கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி என்ற 15 வயது சிறுவன் மிகவும் சிறப்பாக பந்து வீசினான். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவன் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட் எடுத்தான்.

தொடர்ந்து விக்கெட் மழை

அதேபோல் அதற்கு அடுத்த இரண்டு ஓவர்களிலும் 2 விக்கெட் எடுத்தான். அதேபோல் நான்காவது ஓவரில் முதல் மூன்று பால்களில் தொடர்ந்து விக்கெட் எடுத்து ஹாட் டிரிக் சாதனை படைத்தான். பின் கடைசி பாலில் 1 விக்கெட் எடுத்து மொத்தமாக எதிரணியை சுருட்டினான்.

 36 ரன்களில் சுருண்டது

36 ரன்களில் சுருண்டது

இந்த சிறுவன் இந்த நான்கு ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எதிரணி 36 ரன்களில் மொத்தமாக சுருண்டது. இதையடுத்து இந்த சிறுவன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டான். எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, November 9, 2017, 16:32 [IST]
Other articles published on Nov 9, 2017
English summary
A boy in Rajsthan takes 10 Wickets For No Run In T20 Match. Boy called Akash Choudhary achieved this in local T20 tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X