தோனியை பார்க்க 1,400 கிமீ நடைப்பயணம்.. வியந்துப்போய் அவசரமாக அழைத்த தல.. சிலிர்ப்பூட்டும் காரணம்!

மும்பை: தன்னை பார்ப்பதற்காக பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்த ரசிகருக்கு தோனி ஸ்பெஷல் சர்ஃபரைஸ் கொடுத்து வழியனுப்பிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு அடுத்தபடியாக பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தவர் எம்.எஸ்.தோனி.

2022 ஐபிஎல்-ல் சிஎஸ்கே நிலை என்ன? வீரர்கள் தக்கவைப்பு குறித்த சஸ்பன்ஸை உடைத்த தோனி.. முழு விவரம் 2022 ஐபிஎல்-ல் சிஎஸ்கே நிலை என்ன? வீரர்கள் தக்கவைப்பு குறித்த சஸ்பன்ஸை உடைத்த தோனி.. முழு விவரம்

எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றாலும், அவர் என்ன செய்துக்கொண்டிருக்கிறார், அவரின் அப்டேட் என்ன என்பதை குறித்து அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

தோனி வெறியர்

தோனி வெறியர்

அந்தவகையில் ஒரு ரசிகர்கள், ஆர்வத்தின் உச்சத்தில் 1,400 கிமீ தூரம் நடந்தே சென்றுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஹரியானா மாநிலத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் அஜய் கில். இவர் ஹரியானாவில் இருந்து தோனியின் மிகத்தீவிர ரசிகர் ஆவர். எப்படியாவது தோனியை காண வேண்டும் என நினைத்த அஜய் கில், அதற்காக கடந்த ஜூலை மாதம் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னர் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றார்.

நீண்ட தூர பயணம்

நீண்ட தூர பயணம்

தனது மாநிலத்தில் புறப்பட்டு தோனியின் வீடு இருக்கும் ராஞ்சி ( ஜார்காண்ட்டிற்கு) 1,400 கிமீ தூரம் நடந்தே சென்றுள்ளார். நீண்ட சிரமங்களுக்கு பிறகு அவர் சென்றடைந்த போதும் தோனி ஐபிஎல் தொடருக்காக அமீரகம் சென்றிருந்தார். இதனால் ஏமாற்றத்துடன் மீண்டும் தனது ஊருக்கு அஜய் கில் கிளம்பிச் சென்றார்.

தோனியின் சர்ஃபரைஸ்

தோனியின் சர்ஃபரைஸ்

இந்நிலையில் சற்றும் மனம் தளராத அந்த ரசிகர், தற்போது மீண்டும் 1,400 கிமீ தூரம் நடந்தே ராஞ்சிக்கு சென்றுள்ளார். தோனியை பார்த்தே தீர வேண்டும் என அவரின் இல்லத்தின் முன்பு அவர் காத்திருக்க, அதனை அறிந்த தோனி உடனடியாக அவரை பன்னை வீட்டுக்கு அழைத்து வரக்கூறியுள்ளார். அங்கு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி அதோடு அவருக்கு வீடு திரும்புவதற்கான விமான டிக்கெட்டையும் போட்டு கொடுத்துள்ளார்.

ரசிகரின் ஆசை

ரசிகரின் ஆசை

அஜய் கில் சிறுவயது முதலே கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வமுள்ளவர். உள்ளூர் போட்டிகளிலும் அவ்வபோது கலந்துக்கொள்வார் எனக்கூறப்படுகிறது. ஆனால் தோனி ஓய்வு பெற்றது முதல் அஜய்யும் எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். இந்நிலையில் தான், மீண்டும் கிரிக்கெட் விளையாடப்போவதாகவும், அதனை தோனியின் ஆசியுடன் தொடங்கவுள்ளதாகவும் கூறி இந்த நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். அது தற்போது நிறைவேறியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
A die hard fan of Dhoni walks 1,400km to meet his idol, thala gives a memorable gift
Story first published: Saturday, November 20, 2021, 19:13 [IST]
Other articles published on Nov 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X