For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படி போடு..!! ஒழுங்கா விளையாடாவிட்டால் இதுதான்..! பாக். அணியை தடை செய்ய கோரி ரசிகர் வழக்கு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய கோரி, விரக்தி யடைந்த பாக். ரசிகர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 16ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. உலக கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து 7வது முறையாக தோல்வியை சந்திக்கிறது.

இந்தத் தோல்வியை பாகிஸ்தான் ரசிகர்கள் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள வில்லை. பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுதவிர வாசிம் அக்ரம் மற்றும் அக்தர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், கேப்டனுக்கு எதிராகவும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர் மனு

ரசிகர் மனு

இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குஜ்ரன்வாலா கீழமை நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும். மேலும் இப்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள தேர்வுக் குழுவினை முழுமையாக கலைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஏற்கப்பட்ட மனு

ஏற்கப்பட்ட மனு

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கமளிக்க பாகிஸ்கான் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது, பாக். தேர்வுக் குழு தலைவராக இருப்பவர் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களும் இப்போது அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பட்டியலில் 9வது இடம்

பட்டியலில் 9வது இடம்

நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு உள்ளது.

நீக்கப்படுகிறார்?

நீக்கப்படுகிறார்?

பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர், அணியின் மேலாளர் தாலத் அலி, பந்துவீச்சு பயிற்சியாளர் அசார் மகமூத் ஆகியோரும் விரைவில் பதவியிலிருந்து நீக்கப் படலாம் என்று தெரிகிறது. இது குறித்து முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ், கூறிருப்பதாவது:

உடல்தகுதி கிடையாது

உடல்தகுதி கிடையாது

இந்திய வீரர்களுக்கு இணையாக உடல் தகுதியுடன் பாகிஸ்தான் வீரர்கள் அணியில் இல்லை. அவர்கள் இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் போட்டியில் அழுத்தத்துடன் விளையாடினர். ஆனால் இந்தியா எளிமையாக விளையாடி வென்றுள்ளது என்றார்.

Story first published: Wednesday, June 19, 2019, 11:45 [IST]
Other articles published on Jun 19, 2019
English summary
A fan filed case to ban Pakistan cricket team after loss against india.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X