For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்பாடா...! மழை நின்னு போச்சாம்...! நியூசி vs இந்தியா மோதல் கன்பார்ம்..! ரசிகர்கள் உற்சாகம்

நாட்டிங்ஹாம்: எதிர்பார்ப்புக்கு மாறாக மழை நின்றுவிட்டதால் இந்தியா, நியூசி லாந்து ஆட்டம் நிச்சயமாக நடக்கும் என்பது உறுதியாகி விட்டது.

உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் தொடங்கினாலும்.. தொடங்கியது... மழையும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தது. விடாத மழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப் பட்டன. ரசிகர்கள் வேதனை அடைய.. வீரர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் போட்டிகளை நடத்தும் ஐசிசி மீது ரசிகர்கள் சாபமும் விட்டனர்.

தற்போது அதே போன்றதொரு முக்கிய போட்டி மழையால் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலை எழுந்திருந்தது. நாட்டிங்ஹாமில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி. 16 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையில் இந்தியா, நியூசி.யை எதிர் கொள்வதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த மாதிரி தப்பு பண்ணினா.. இந்தியாவை எப்படி ஜெயிக்குறது? வார்னிங் கொடுத்த பாக். கேப்டன்! இந்த மாதிரி தப்பு பண்ணினா.. இந்தியாவை எப்படி ஜெயிக்குறது? வார்னிங் கொடுத்த பாக். கேப்டன்!

மழையின் மிரட்டல்

மழையின் மிரட்டல்

ஆனால்... கடந்த சில நாட்களாக நாட்டிங்ஹாம் பகுதியில் மழை மிரட்டி வந்தது. ஜோவென்று பெய்யும் மழையால் வீரர்களின் பயிற்சி ஆட்டமும் பாதிக்கப் பட்டது. காதலியின் முடிவு என்ன என்பதை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் காதலன் முடிவு, வானிலை மைய தகவலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

வானிலை நிலவரம் என்ன?

வானிலை நிலவரம் என்ன?

யார் எதிர்பார்க்கிறார்களோ... இல்லையோ... ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இங்கிலாந்தின் வானிலை நிலவரம் என்ன என்பதை தேடி பிடித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். அவர்களின் ஆர்வத்துக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது.

போட்டி குறித்து சந்தேகம்?

போட்டி குறித்து சந்தேகம்?

போட்டி நடைபெறும் நாட்டிங்ஹாம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் வரை கிட்டத் தட்ட 70 சதவீதம் வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை மையம் கூறியிருந்தது. அதனால் போட்டிக்கு 80 சதவீதம் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்க்கப்பட்டது.

மழை நின்றுவிட்டது

மழை நின்றுவிட்டது

ஆனால்.. தற்போது மழை காலை முதல் இல்லை, நின்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 4 நாட்களாக மிரட்டிய மழை தற்போது இல்லை. அப்படியே இருந்தாலும் 40 சதவீதம் வரையே மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி உறுதி

போட்டி உறுதி

ஆனால் அந்த மழையும் மதியத்துக்குள் நின்றுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்தியா, நியூசி. போட்டி நடைபெறுவது உறுதி ஆகி விட்டது. ரசிகர்களுக்கும் இந்த செய்தி சென்றுசேர்ந்து விட்ட படியால் ஏகத்துக்கும் குஷியாகி இருக்கின்றனர். பின்ன...? 16 ஆண்டுகள் கழித்து இந்தியா, நியூசி. அணிகள் மோதுகின்றன என்பது சும்மாவா.. என்ன...?

Story first published: Thursday, June 13, 2019, 12:36 [IST]
Other articles published on Jun 13, 2019
English summary
A good news to Indian fans that rain it has stopped in Nottingham.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X