For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னை தூக்காதே!! தோனிக்கு மறுப்பு தெரிவித்த சுட்டிக் குழந்தை.. ஏன்பா இப்படி?

மும்பை : பிரபல கிரிக்கெட் வீரர் தோனி, ஒரு குழந்தையை தூக்க வந்த போது அந்த குழந்தை மறுத்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் பரவி வருகிறது.

தோனி மும்பையின் ஜுஹு பகுதியில் நடைபெற்ற நிதி திரட்டல் கால்பந்து போட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களை சந்தித்து வந்தார்.

மறுத்த குழந்தை

மறுத்த குழந்தை

அப்போது குழந்தை ஒன்றை அழைத்து வந்து தோனியிடம் காட்டினர் சிலர். தோனி அந்த குழந்தையை தூக்கிக் கொஞ்ச முயன்றார். ஆனால், தோனி தூக்கச் சென்றதும், அந்த குழந்தை அதற்கு மறுத்தது.

சுட்டிக் குழந்தைகள்

இதனால், தோனியும் அந்த குழந்தையை தூக்கவில்லை. பின்னர், அவர் மற்ற ரசிகர்களை சந்தித்து விட்டு காரில் ஏறி சென்று விட்டார். தோனியை நேரில் பார்க்க பலரும் ஏங்கி வரும் நிலையில், இந்த குழந்தை இப்படி செய்து விட்டதே! எனினும், குழந்தைகள் பிரபலத்தை எல்லாம் பார்ப்பதில்லை.

ஓய்வில் தோனி

ஓய்வில் தோனி

தோனி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வில் இருக்கிறார். இந்த ஓய்வில் தான் கால்பந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

தோனி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளார். பின்னர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட உள்ளார்.

ஐபிஎல்-இல் தோனி

ஐபிஎல்-இல் தோனி

ஐபிஎல் 2019 தொடருக்கான அட்டவணை நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது. மார்ச் 23 அன்று இந்த சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே - பெங்களூர் அணிகள் மோதுகின்றன. அதன் பின் தோனி, உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.

சாம்பார் மஞ்ச கலரா? சிவப்பு கலரா? அடித்துக் கொண்ட சிஎஸ்கே - பெங்களூர் அணிகள்.. ஐபிஎல் பஞ்சாயத்து!சாம்பார் மஞ்ச கலரா? சிவப்பு கலரா? அடித்துக் கொண்ட சிஎஸ்கே - பெங்களூர் அணிகள்.. ஐபிஎல் பஞ்சாயத்து!

Story first published: Wednesday, February 20, 2019, 14:25 [IST]
Other articles published on Feb 20, 2019
English summary
A Kid says no to Dhoni, when he offers to pick up the kid. This incident happened after a Charity Football match in Juhu, Mumbai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X