For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காதலால் மலர்ந்த ’ஆஷஸ் டெஸ்ட் தொடர்’ 139 வருடமாக நடக்கும் அன்பு போர்.. பின்னால் உள்ள வரலாறு தெரியுமா

சென்னை: உலகின் மிக பிரபலமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. ஆனால் அதன் தொடருக்கான வரலாற்றை பலரும் சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர்.

Recommended Video

139 வருடமாக நடக்கும் முக்கிய போட்டி.. Ashes Series-க்கு பின்னால் இருக்கும் கதை தெரியுமா ?

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே யுத்தம் போன்று ஆஷஸ் என்ற டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவதை கவுரவமாக கருதுகின்றனர்.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

இந்த தொடரை கைப்பற்றும் அணிக்கு மரத்தினாலான சிறிய கோப்பை மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்காகவா இப்படி போராடுகிறார்கள் என கேள்வி எழலாம். ஆனால் ஒரு சுவாரஸ்ய வரலாறு இதற்கு பின்னால் உள்ளது.

முதல் வெற்றி

முதல் வெற்றி

29 ஆகஸ்ட் 1882ம் ஆண்டு இங்கிலாந்து அணியை அதன் மண்ணிலேயே முதல் முறையாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா. அதற்கு முன்பு வரை டெஸ்டில் தோல்வியை மட்டுமே கண்டிருந்ததால், ஆஸ்திரேலிய அணியை " ஜெயில் காலணி ஆஃப் இங்கிலாந்து" என இங்கி, மக்கள் அழைத்து வந்தனர். அதற்கு இங்கிலாந்தில் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் இடம் என்பதே பொருள் ஆகும். இதனை மாற்றி அமைக்கும் வகையில் தான் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது ஆஸ்திரேலியா.

தலைப்புச் செய்தி

தலைப்புச் செய்தி

அந்த வெற்றிக்கு அடுத்த நாளே, ஆஸ்திரேலியாவின் "தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்" என்ற பத்திரிகையில் அதிர்ச்சி தரும் வகையிலான தலைப்பு செய்தி ஒன்று வெளியானது. அதில் " ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் உயிழந்துவிட்டது, உடலை தகனம் செய்து சாம்பலை ( Ashes) ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து சென்றனர்" என கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தனர். இந்த விவகாரம் சூடுபிடித்தது.

கடுப்பான இங்கி, கேப்டன்

கடுப்பான இங்கி, கேப்டன்

இதன் பின்னர் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது கடும் கோபத்துடன் செய்தியாளர்களை சந்தித்த, அப்போதைய இங்கிலாந்து கேப்டன் இவோ ப்லிக், "இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை ( Asheses) மீண்டும் நாட்டிற்கு எடுத்து செல்வோம் என பகிரங்கமாக சபதம் ஏற்றார்." அவர் கூறியதை போலவே 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. அதுவரை சாம்பல் என்ற ஒரு விஷயமோ, கோப்பையோ இல்லாமல் இருந்தது.

ஆஷஸ் கோப்பை

ஆஷஸ் கோப்பை

இங்கிலாந்து வெற்றியை அடுத்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஃப்ளோரன்ஸ் மர்ஃபி என்ற பெண்மணி விநோதமாக ஒரு செயலை செய்தார். அதாவது அந்த போட்டியில் பயன்படுத்திய ஸ்டம்ப் பெயில் கட்டகளை எரித்து அதன் சாம்பள்களை, அவர் பயன்படுத்திய நறுமண திரவியத்தின் பாட்டிலின் ( பர்ஃப்யூம் பாட்டில்) மேல் வைத்து கோப்பையை போன்று கொடுத்தார். இதுதான் முதல் ஆஷஸ் கோப்பை ஆகும்.

கடைபிடிக்கப்படும் விதிமுறை

கடைபிடிக்கப்படும் விதிமுறை

அதில் இருந்து தற்போது வரை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஷஸ் என்ற டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இது எப்போதுமே 5 போட்டிகள் கொண்ட தொடராக மட்டுமே உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தான் இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இதே போல டிசம்பர் மாதத்தில் தான் ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்பது தான் விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Story first published: Wednesday, December 8, 2021, 12:12 [IST]
Other articles published on Dec 8, 2021
English summary
A Love Story Behind The Historical Cricket Rivalry “The Ashes”.. All the details you need to know
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X