For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒத்த ஆட்டம்..!! ஒட்டுமொத்த பாகிஸ்தானையே பேச வைச்சிடுச்சே...!! அணி நிர்வாகத்தில் வருகிறது மாற்றம்?

Recommended Video

Inzamam Ul Haq: தோல்விக்கு காரணம் இவர் தான்-பாகிஸ்தான் அணிக்குள் வெடிக்கும் சர்ச்சை!- வீடியோ

இஸ்லாமாபாத்: உலக கோப்பையில் மோசமான பார்ம் காரணமாக, பாகிஸ்தான் அணி நிர்வாகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை விமர்சித்து வருகின்றனர். உச்சகட்டமாக, பாகிஸ்தான் அணியை தடை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

A major changes going to happen in Pakistan cricket board

இந்நிலையில், பாகிஸ்தான் அணி தேர்வுக்குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக், பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர், அணி மேலாளர் தௌலத் அலி, பவுலிங் பயிற்சியாளர் அசார் மெஹமூத் உள்ளிட்ட பல கிரிக்கெட் அணி நிர்வாகிகள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

உலகக் கோப்பை தொடர் நாயகன்.. இந்த 4 பேரில் ஒருவர்தான்.. சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த அந்த வீரர்! உலகக் கோப்பை தொடர் நாயகன்.. இந்த 4 பேரில் ஒருவர்தான்.. சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த அந்த வீரர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் லாகூரில் நடைபெறவுள்ளது. அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதற்காக பாகிஸ்தான் அணியின் நிர்வாக இயக்குநர் வாசிம் கான் தனது சுற்றுப் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்புகிறார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக அந்நாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

Story first published: Wednesday, June 19, 2019, 17:14 [IST]
Other articles published on Jun 19, 2019
English summary
A major changes going to happen in Pakistan cricket board.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X