ஜில்.. ஜில்.. கூல்.. கூல்.. வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தில் கொண்டாட்டம் போட்ட விராட்

துபாய் : ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக யூஏஇயில் முகாமிட்டு பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர் ஆர்சிபி அணி வீரர்கள்.

இதுவரை ஒருமுறை கூட டைட்டிலை வெற்றி கொள்ளாத விராட் கோலி தலைமையிலான அந்த அணி, இந்த முறை கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகின்றது.

இந்நிலையில் யூஏஇயின் வெயிலை சமாளிக்க முடியாத விராட் கோலி தலைமையிலான அந்த அணி வீரர்கள் நீச்சல் குளத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெய்னா உறவினர்கள் கொலை.. காவல்துறைக்கு கிடைத்த துப்பு.. உருட்டுக்கட்டையுடன் சிக்கிய 3 கொள்ளையர்கள்!

விராட் கோலி மகிழ்ச்சி

விராட் கோலி மகிழ்ச்சி

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி வீரர்கள் ஐபில் போட்டிகளில் பங்கேற்பதற்காக தற்போது யூஏஇயில் உள்ளனர். இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை வெற்றி கொள்ளாத அந்த அணி, தங்களது பயிற்சி ஆட்டங்களை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். கடந்த 2016க்கு பிறகு தற்போதுதான் அமைதியாக உணர்வதாக அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

நீச்சல் குளத்தில் கொண்டாட்டம்

நீச்சல் குளத்தில் கொண்டாட்டம்

யூஏஇயில் 45 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை காணப்படும். இதனால் அங்கு வெயிலை சமாளித்து விளையாடுவது 8 அணி வீரர்களுக்கும் சவாலான விஷயம். இந்நிலையில் பயிற்சிகளுக்கிடையில் கிடைத்த இடைவெளியில் விராட் கோலி, பவன் நேகி, குர்கீரத் சிங் உள்ளிட்ட அணியின் வீரர்கள் நீச்சல் குளத்தில் தங்களது வெப்பத்தை தணித்துக் கொண்டனர்.

இன்ஸ்டாகிராமில் விராட் பதிவு

இன்ஸ்டாகிராமில் விராட் பதிவு

சக வீரர்களுடன் நீச்சல் குளத்தில் தான் மேற்கொண்ட கொண்டாட்டத்தின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பதிவு செய்துள்ளார். ஒரு புகைப்படத்தில் வெற்றிக்கான முத்திரையையும் அவர் தன்னுடைய கைகளில் காண்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ஒரு புகைப்படத்தின் சக வீரர்கள் காணப்படுகின்றனர்.

கோப்பையை வெல்லாத விராட்

கோப்பையை வெல்லாத விராட்

ஐபிஎல் போட்டிகளின் அதிகமான ரன்களை குவித்தவர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இவர் இதுவரை 5,412 ரன்களை குவித்துள்ளார். மேலும் கடந்த 2016 சீசனில் 4 சதங்களை அடித்து 973 ரன்களை குவித்து ஒரு சீசனில் அதிக ரன்களை பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஆயினும் தன்னுடைய அணிக்காக ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்ற குறை அவரிடம் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat Kohli had a "proper day at the pool" with his team mates
Story first published: Wednesday, September 16, 2020, 14:34 [IST]
Other articles published on Sep 16, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X