For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேன் வில்லியம்சன் கேப்டன் பதவியை பறிக்க சதி.. நியூசி. கோச் ரகசிய திட்டம்.. ட்வீட்டால் பரபரப்பு!

கேன்டர்பரி : நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சனை பதவி நீக்கம் செய்ய உள்ளடி வேலைகள் நடப்பதாக ஒரு ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Recommended Video

Tweet says Kane Williamson's Captaincy Under Danger

டெஸ்ட் அணியில் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சனை நீக்கி விட்டு, டாம் லாதம்-ஐ கேப்டனாக மாற்ற பயிற்சியாளர் கேரி ஸ்டெட் முயற்சித்து வருவதாக ஜேம்ஸ் மெக்ஓனி என்பவர் ஒரு ட்வீட் போட்டு இருந்தார்.

இது குறித்த பரபரப்பு எழுந்த நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

வீரர்களுக்கு டெஸ்ட் எடுங்க... அவங்களுக்கு வைரஸ் தொற்று இருக்கான்னு பாருங்கவீரர்களுக்கு டெஸ்ட் எடுங்க... அவங்களுக்கு வைரஸ் தொற்று இருக்கான்னு பாருங்க

ஒரே ஒரு ட்வீட்

ஒரே ஒரு ட்வீட்

"கிரவுட் கோஸ் வைல்ட்" என்ற நிகழ்ச்சியை நடத்தி வருபவர் தான் இந்த ஜேம்ஸ் மெக்ஓனி. அவர் போட்ட அந்த ஒரே ஒரு ட்வீட்டால் இந்த பரபரப்பு எழுந்தது. ஆனால். முழு விவரத்தையும் வெளியிடவில்லை. வதந்தியாக மட்டுமே கூறி இருந்தார்.

காரணம்

காரணம்

எனினும், இந்த விஷயத்தை ரசிகர்கள் நம்ப காரணம் உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் துவங்கி நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 0 - 3 என படு தோல்வி அடைந்தது. அப்போது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

வேலைப் பளு, பாதிப்பு

வேலைப் பளு, பாதிப்பு

கேன் வில்லியம்சன் நியூசிலாந்து ஒருநாள் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி என மூன்றிற்கும் கேப்டனாக உள்ளார். அவரால் கேப்டன் பதவியால் உண்டாகும் வேலைப் பளுவை தாங்க முடியவில்லை என்ற புகார் எழுந்தது. அது அவரது பேட்டிங்கையும் பாதிப்பதாக கூறப்பட்டது.

இந்தியா டெஸ்ட் தொடர்

இந்தியா டெஸ்ட் தொடர்

அப்போது டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் நீக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்து இந்தியா உடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது நியூசிலாந்து அணி.

கேப்டன்சி விமர்சனம் அடங்கியது

கேப்டன்சி விமர்சனம் அடங்கியது

அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2 - 0 என வீழ்த்தி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பெற்ற தோல்வியில் இருந்து மீண்டது நியூசிலாந்து அணி. அத்துடன் கேன் வில்லியம்சன் மீதான விமர்சனமும் அடங்கியது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை.

பயிற்சியாளர் பற்றி பரபரப்பு

பயிற்சியாளர் பற்றி பரபரப்பு

இந்த நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஜேம்ஸ் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தான் இந்த மாற்றத்துக்காக காய் நகர்த்தி வருவதாக கூறி உள்ளார்.

டி20 கேப்டன்சியை மாற்றலாமே!

டி20 கேப்டன்சியை மாற்றலாமே!

டாம் லாதமை டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்க கேரி ஸ்டெட் முயற்சித்து வருவதாகவும், கேன் வில்லியம்சன் பணிச் சுமையை குறைக்க டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கலாம். ஆனால், டெஸ்ட் அணி கேப்டன் பதவியை குறி வைப்பதாகவும் ஜேம்ஸ் கூறி உள்ளார்.

சம்பள நிர்ணயத்தில் குழப்பம்

சம்பள நிர்ணயத்தில் குழப்பம்

மேலும், நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் வீரர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான தரவரிசையில், வீரர்களின் செயல்பாட்டை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் தரவரிசை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அணியில் குழப்பம் இருப்பதாக அவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இது உண்மையா?

இது உண்மையா?

கேன் வில்லியம்சன் நீக்கப்பட உள்ளதாக வந்த தகவல் பரவியதை அடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பின் சார்பில் அதை ஒரு நிர்வாகி மறுத்துள்ளார். இது வெறும் வதந்தியா? அல்லது உண்மையா? என்பது அடுத்த சில வாரங்களில் தெரிய வரும்.

Story first published: Wednesday, May 20, 2020, 16:55 [IST]
Other articles published on May 20, 2020
English summary
A tweet says there is a captaincy coup to remove Kane Williamson from test captaincy. But NZ cricket rejects the claims.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X