For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாரி.. கோலி, ரோஹித் சர்மாவுக்கெல்லாம் என் டீமில் இடமில்லை.. முன்னாள் இந்திய வீரரின் அதிரடி முடிவு!

டெல்லி : முன்னாள் இந்திய டெஸ்ட் அணி வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் சமூக வலைதளத்தில் சிறந்த டி20 அணியை தேர்வு செய்தார்.

Recommended Video

Rohit Sharma Birthday special | Story of Rohit Sharma in Tamil

அதில் டி20 போட்டிகளில் தற்போது அதிக ரன்கள் குவித்து, பல சாதனைகள் செய்து இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு இடம் அளிக்கவில்லை.

அதற்கு அவர் ஒரு நியாயமான காரணத்தையும் கூறி ரசிகர்களை சாந்தப்படுத்தினார்.

காக்கா வலிப்பு, மனநல பாதிப்புடன் கிரிக்கெட் ஆடிய பாக். வீரர்.. அதிர வைக்கும் உண்மையை சொன்ன அதிகாரி!காக்கா வலிப்பு, மனநல பாதிப்புடன் கிரிக்கெட் ஆடிய பாக். வீரர்.. அதிர வைக்கும் உண்மையை சொன்ன அதிகாரி!

ஐசிசி-யின் சிறந்த டி20 அணி

ஐசிசி-யின் சிறந்த டி20 அணி

ஐசிசி அமைப்பு கொரோனா வைரஸ் தோற்றால் எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்காத நிலையில் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலகின் சிறந்த டி20 அணியை அறிவிக்குமாறு கேட்டு இருந்தது.

ஒரு இந்திய வீரர்

ஒரு இந்திய வீரர்

இந்திய முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தன் சிறந்த டி20 அணியை அறிவித்தார். அதில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம் பெற்று இருந்தார். ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லை. அது பற்றி விளக்கம் அளித்தார்.

அந்த விஷயம்

அந்த விஷயம்

ஐசிசி சிறந்த டி20 அணியை கூறுமாறு கேட்ட போது கூடவே ஒரு விஷயத்தை சொன்னது. ஒவ்வொரு நாட்டில் இருந்தும் ஒரு வீரரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றது. அதனால், தான் அதன்படி அணியை தேர்வு செய்துள்ளதாக கூறி உள்ளார்.

யாருப்பா அந்த வீரர்?

யாருப்பா அந்த வீரர்?

சரி அப்படி பார்த்தாலும் ஒரு இந்திய வீரரை தேர்வு செய்யலாமே அதில் கூட ரோஹித் சர்மா அல்லது விராட் கோலிக்கு இடம் இல்லையா? ஆம் இல்லை என கூறி உள்ளார் ஆகாஷ் சோப்ரா. அப்புறம் யாருக்கு இடம் அளித்துள்ளார்?

அதிரடி துவக்க வீரர்கள் யார்?

அதிரடி துவக்க வீரர்கள் யார்?

ஆகாஷ் சோப்ராவின் சிறந்த டி20 அணியில் துவக்க வீரர்களாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை தேர்வு செய்துள்ளார். இவர்கள் 2019 ஐபிஎல் தொடரில் ஜோடியாக பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள்

நியூசிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள்

அடுத்த இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து அணியின் கோலின் மன்றோ மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம்-ஐ தேர்வு செய்துள்ளார். ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்ய அதிரடி மன்னன் ஏபி டி வில்லியர்ஸ்-ஐ தேர்வு செய்துள்ளார்.

இரண்டு ஆல் - ரவுண்டர்கள்

இரண்டு ஆல் - ரவுண்டர்கள்

ஆறாம் மற்றும் ஏழாம் இடத்தில் சிறந்த ஆல் - ரவுண்டர்கள் ஆன வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பந்துவீச்சாளர்களாகவும் இருப்பார்கள்.

இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள்

இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள்

அடுத்து நான்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார். அதில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களாக ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் மற்றும் நேபாள அணியின் சந்தீப் லாமிச்சேன் உள்ளனர். வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர் லசித் மலிங்கா.

அந்த இந்திய வீரர் இவர்தான்!

அந்த இந்திய வீரர் இவர்தான்!

மற்றொரு வேகப் பந்துவீச்சாளராக பும்ராவை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இவர் தான் ரோஹித் சர்மா, விராட் கோலியை தாண்டி சிறந்த டி20 அணியில் இடம் பெற்ற இந்திய வீரர். ரோஹித், கோலிக்கு கூட மாற்று வீரர்கள் உண்டு, ஆனால் பும்ராவுக்கு இல்லை என்பதையே இதன் மூலம் கூறி உள்ளார் ஆகாஷ் சோப்ரா.

Story first published: Friday, May 1, 2020, 20:19 [IST]
Other articles published on May 1, 2020
English summary
Aakash Chopra excluded Rohit Sharma and Virat Kohli in best T20 XI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X