For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 2 பேர் இருந்தா மட்டும் போதும்.. அவ்ளோதான்.. இந்திய அணியின் பேட்டிங் வரிசை..ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

மும்பை: இந்திய அணியின் பவுலிங் ஆர்டர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா டிப்ஸ் கூறியுள்ளார்.

வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சோகம்.. ஆஸி.,யின் நம்பர்.2 ஸ்பின்னர்.. சோகம்.. ஆஸி.,யின் நம்பர்.2 ஸ்பின்னர்..

போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் களம் எப்படி இருக்கும், வானிலை எப்படி இருக்கும் உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஏஜஸ் பவுல்

ஏஜஸ் பவுல்

இங்கிலாந்து களத்தில் வழக்கமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். பிட்ச்-ல் புற்கள் அதிகளவில் இருக்காது என்பதால் பந்தில் நல்ல ஸ்விங்கும், பவுன்ஸும் இருக்கும். இதன் காரணமாக இரு அணிகளின் பந்துவீச்சு பலம் குறித்த ஒப்பீடுகள் மற்றும் பலத்தை முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர்.

 ஸ்பின்னிங் கூட்டணி

ஸ்பின்னிங் கூட்டணி

இந்நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அட்வைஸ் கூறியுள்ளார். அதில், இந்திய அணி 5 பவுலர்களை வைத்துக்கொண்டு களமிறங்க வேண்டும். அதில் அஸ்வின் மற்றும் ஜடேஜா கண்டிப்பாக இடம்பிடிக்க வேண்டும். மீதம் இருக்கும் 3 இடங்களில் வேகப்பந்துவீச்சாளர்களை நிரப்பலாம். ஸ்பின்னிங்கில் சிறந்து விளங்கக்கூடிய ஆசிய நாடு ஒன்றும் நமக்கு எதிரணியாக வரவில்லை. நியூசிலாந்துதான் உள்ளது. எனவே அதனை பயன்படுத்தி அச்சுறுத்த வேண்டும்.

சிறிது கடினம்

சிறிது கடினம்

இங்கிலாந்து போன்ற களத்தில் சுழற்பந்துவீச்சு சிறிது கடினம் தான். ஆனால் பவுலிங்கில் அதிகளவில் வித்தியாசம் காட்டினால் நிச்சயம் பயனளிக்கும். அந்த வகையில் அஸ்வின் - ஜடேஜா சிறப்பாக ஓவர் வீசக்கூடியவர்கள் ஆகும். அந்த களத்தில் புற்களை பார்க்க முடியாதுதான். ஆனால் ஒருவேளை புற்கள் சிறிது இருந்துவிட்டால் ஸ்பின்னர்களை தைரியமாக அனுப்பலாம்.

 பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசையை பொறுத்தவரை ரிஷப் பண்ட்-ஐ 6வது இடத்தில் களமிறக்க வேண்டும். அஸ்வின் 7வது இடத்திலும், ஜடேஜா 8 இடத்தில் களமிறக்க வேண்டும். அதன் பிறகு 3 வேகப்பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வரவேண்டும். இதுதான் தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு சரியான அணியாகும் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, June 7, 2021, 1:20 [IST]
Other articles published on Jun 7, 2021
English summary
Aakash Chopra Explains how the Indian bowling unit should lineup v NZ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X