"இப்படி நீ ஆடுறதை பார்க்கவா உட்கார்ந்திருந்தோம்?" - Pant-ஐ சுளுக்கெடுத்த ஆகாஷ் சோப்ரா

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தை போட்டு வறுத்தெடுத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

5 வருடத்திற்கு முன் நடந்த அதே சம்பவம்.. ஜூஸ் குடிக்கும் கேப்பில்..முகமது ஷமியிடம் கோலி கூறிய ப்ளான்!5 வருடத்திற்கு முன் நடந்த அதே சம்பவம்.. ஜூஸ் குடிக்கும் கேப்பில்..முகமது ஷமியிடம் கோலி கூறிய ப்ளான்!

இப்போட்டியை இந்தியா டிரா செய்திருக்க வாய்ப்பிருந்தது என்றும், இரண்டாம் இன்னிங்ஸின் பிற்பகுதியில், இந்திய அணி அதிரடியாக விளையாட நினைத்தது தவறு என்பது குறித்தும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ரிஷப் பண்ட்டின் இன்டென்ட் இல்லாத பேட்டிங் குறித்து தான் ஏகப்பட்ட ரசிகர்கள் மட்டுமல்லாது, கிரிக்கெட் எக்ஸ்பெர்ட்ஸ்களின் ஏமாற்றத்தையும் காண முடிகிறது.

 ஒரு பவுண்டரி கூட

ஒரு பவுண்டரி கூட

ரிஷப் பண்ட்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் X-Factor என்று கற்பூரத்தில் சத்தியம் அடிக்காத குறையாக நம்பப்பட்டவர். ஆனால், முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் வெளியேறியவர், இரண்டாவது இன்னிங்ஸில் 88 பந்துகளை சந்தித்து 41 ரன்கள் எடுத்தார். ஆனால், கடைசி நாள் ஆட்டத்தின் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த போது கூட அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சை அவர் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

 முயற்சியும் இல்ல

முயற்சியும் இல்ல

ஜேமிசன், வாக்னர், சவுதி, போல்ட் என்று எந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பந்திலும் அவரால் அடிக்க முடியவில்லை. குறிப்பாக ஜேமிசன் பந்தை ஒரு இடத்தில் கூட அடிக்க முயற்சி எடுக்கவே இல்லை. அதைக் கூட ரிஸ்க் எடுக்க வேண்டாம் என அவர் விட்டுவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்சம் வாக்னர் பந்துகளை கூட அவரால் அடிக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கும் குறைந்தபட்ச நியாயம் கூட அவர் கற்பிக்கவில்லை அல்லது கற்பிக்க முடியவில்லை.

 பெரும் சொதப்பல்

பெரும் சொதப்பல்

அட்லீஸ்ட், கடைசியில் இறங்கி இரண்டு மூன்று பவுண்டரிகள் அடித்த ஷமி அளவுக்கு கூட பண்ட்டின் பேட்டிங் ஆழம் இல்லை என்பதே நிதர்சனம். அவர் மட்டும் கூடுதலாக 30 ரன்கள் அடித்திருந்தால், கிளைமேக்ஸ் மாற்றப்பட்டிருக்கலாம். மற்ற வீரர்கள் கடுமையாக சொதப்பினாலும், அணிக்கு கைக்கொடுக்க வேண்டிய கடமை ரிஷப் பண்ட்டுக்கு உள்ளது. ஆனால், எக்ஸ் ஃபேக்டர் டோட்டலாக புஸ்ஸாகிவிட்டது. இதற்கு நியூசிலாந்து பவுலிங்கில் ஸ்பின் இல்லாததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

 மேட்ச் வின்னிங்

மேட்ச் வின்னிங்

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, "ரிஷப் பண்ட் ஒரு கோடீஸ்வரரைப் போல பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் மிகவும் நன்றாக பேட் செய்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம். சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்ததை பார்த்துள்ளோம். கப்பா டெஸ்ட் போட்டியில் அவர் 89 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்ததை பார்த்திருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த இரண்டு சதங்களை குறித்து பேசியிருக்கிறோம். அவரிடமிருந்து மேட்ச் வின்னிங் ஆட்டங்களை பார்த்திருக்கிறோம், ஆனால் அவர் அங்கு இப்படி பேட் செய்து பார்த்ததில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Aakash Chopra disappointment over Pant’s wtc - ரிஷப் பண்ட்
Story first published: Thursday, June 24, 2021, 20:12 [IST]
Other articles published on Jun 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X