இனி அவர் அவ்ளோதான்.. ஹர்திக் பாண்டியாவின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறி.. முன்னாள் வீரரின் பகீர்!

மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி ஹர்திக் பாண்டியாவை நீண்ட காலம் பார்க்க முடியாது என முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர்.

கேகேஆர் அணியில் 4வது வீரருக்கு கொரோனா. இந்திய அணியில் கிடைத்த வாய்ப்புக்கும் ஆபத்து.. தொடர் சோதனைகள்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கி ஜூன் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின்னருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக 24 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்டியாவின் பெயர் இடம் பெறவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

ஹர்த்திக் பாண்டியா பந்துவீசாமல் இருப்பதே இந்திய அணியில் இடம் பெறாததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் ஹர்த்திக் பாண்டியாவுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகள் எதிலும் பவுலிங் செய்யாமல் இருந்தார். கடந்தாண்டு ஐபிஎல் மற்றும் இந்தாண்டு ஐபிஎல்-ம் அவர் ஒரு பந்து கூட வீசவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்டில் குறைவான ஓவர்கள் அவ்வபோது வீசினார்.

இனி அவ்வளவு தான்

இனி அவ்வளவு தான்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, டெஸ்ட் சாமியன்ஷிப் இறுதி போட்டியில் அவர் இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் இங்கிலாந்துடனான 5 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சேர்க்கப்படவில்லை. இதன் மூலம் ஹர்திக் பாண்டியா இனி நீண்ட காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோன்றமாற்றார் என்பது தெரிகிறது.

அவர் தேவை

அவர் தேவை

நாம் அனைவரும் ஹர்திக்கிக் அணியில் இடம்பெறுவார் என நினைத்தோம். ஏனென்றால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற களங்களில் ஹர்திக் பாண்டியா வேகப்பந்துவீச்சுக்கு நிச்சயம் தேவைப்படுவார். ஆனால் தற்போது அவரது பந்துவீச்சில் பிரச்னை உள்ளது. அவர் பந்துவீசாதது குறித்து இங்கிலாந்து தொடரின் போது பேசிய கோலி, ஹர்திக் பாண்டியாவுக்கு பணிச்சுமை அதிகமாக கொடுக்கவிரும்பவில்லை. அவரை டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக பயன்படுத்தவுள்ளோம் என தெரிவித்திருந்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Aakash Chopra feels Hardik Pandya may not be seen in Test cricket for long while
Story first published: Saturday, May 8, 2021, 19:35 [IST]
Other articles published on May 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X