For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜாவின் "டர்னிங் பாயிண்ட்".. அடிச்சாரு பாரு "86".. வாழ்க்கையே மாறிடுச்சு

மும்பை: ரவீந்திர ஜடேஜா எனும் தனி நபரின், ஒரு விளையாட்டு வீரரின் இந்த வளர்ச்சி அவ்வளவு சாதாரணமாக ஏற்பட்டுவிடவில்லை. அது எப்படி நிகழ்ந்தது என்று ஆகாஷ் சோப்ரா சொல்லக் கேட்போம்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நாளை மறுநாள் (ஜூன் 18) தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

பும்ரா vs போல்ட் - எதிர்ல யார் நின்னாலும் அடி உறுதி.. கலங்கும் பேட்ஸ்மேன்கள் பும்ரா vs போல்ட் - எதிர்ல யார் நின்னாலும் அடி உறுதி.. கலங்கும் பேட்ஸ்மேன்கள்

இதில், இந்திய அணியின் லோ-ஆர்டரில் மிக முக்கிய வீரராக இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 51 போட்டிகளில் ஆடியுள்ள ஜடேஜா, மொத்தம் அடித்துள்ள ரன்கள் 1,954. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆவரேஜ் 36.18. பெஸ்ட் ஸ்கோர் 100 (நாட் அவுட்). குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் டெஸ்ட்டில் அவரது வளர்ச்சி என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

ஆவரேஜ் 32.52

ஆவரேஜ் 32.52

அதுவே, வெளிநாடு டெஸ்ட் தொடர்களில் அவர் மொத்தம் 18 போட்டிகளில் விளையாடி, 748 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 32.52. பெஸ்ட் ஸ்கோர் 86( நாட் அவுட்). குறிப்பாக, இங்கிலாந்தில் அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் அடித்த 86* பெஸ்ட் ஸ்கோர் இங்கிலாந்தில் தான். இரண்டு அரைசதம் அடித்திருக்கிறார்.

ஃபார்ம் உச்சத்தில்

ஃபார்ம் உச்சத்தில்

பந்துவீச்சைப் பொறுத்தவரை, இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 233 ஓவர்கள் வீசியிருக்கிறார். அதில் 28 மெய்டன் ஓவர்கள். 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். பெஸ்ட் 4/79. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இங்கிலாந்தில் ஓரளவு டீசண்ட்டான கிரிக்கெட்டை அவர் ஆடியிருக்கிறார். குறிப்பாக, இந்த சீசனில் ஜடேஜாவின் ஃபார்ம் உச்சத்தில் இருக்கிறது. அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், ஜடேஜா இன்ட்ரா ஸ்குவாட் ஆட்டத்தில் அரைசதம் அடிக்க, கோலி - சாஸ்திரி காம்போ ஹேப்பி அண்ணாச்சி மோடில் உள்ளது.

சறுக்கிய கிரிக்கெட்

சறுக்கிய கிரிக்கெட்

இந்நிலையில், இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ரவீந்திர ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கையின் திருப்புமுனை குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ரவீந்திர ஜடேஜா, இவ்வளவு தூரம் வளர்ந்து, இந்த இடத்திற்கு வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. உண்மையில், ஆரம்பத்தில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை சறுக்கலுடனே இருந்தது. ஐபிஎல்-ல் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. சில சிக்கல்களை சந்தித்தார். ஆனால் அனைத்தையும் மீறி இன்று ஒரு உயரத்திற்கு வந்துவிட்டார்.

உண்மையான திறமை

உண்மையான திறமை

பிறகு, குல்தீப், சாஹல் (குல்-சா) அணிக்குள் நுழைந்த பிறகு, அவர் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளிலும் தேர்வு செய்யப்படவில்லை, அவர் டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வினுக்கு அடுத்த ஆப்ஷனாகவே இருந்தார். ஆகவே அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது போன்று தெரிந்தது. ரவீந்திர ஜடேஜாவின் உண்மையான திறமை வெளிவர சற்று நேரம் பிடித்தது.

மாறிய வாழ்க்கை

மாறிய வாழ்க்கை

ஆனால், இங்கிலாந்தில் கடந்த 2018ம் ஆண்டு அவர் அடித்த அரை சதம் தான், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் "டர்னிங் பாயிண்ட்' என்று நான் கூறுவேன். அந்த தொடரில் முதல் நான்கு போட்டிகளில் ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால், ஓவலில் நடந்த கடைசிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதில் 4/79 என்பது கவனிக்கத்தக்க வேண்டியது. முதல் இன்னிங்ஸில் கடைசி வரை அவுட் ஆகாமல், 86 ரன்கள் எடுத்தது அவரது பாதையையே மாற்றியது.

ஃபீல்டிங் வேற லெவல்

ஃபீல்டிங் வேற லெவல்

"அவர் எங்கு சென்றாலும், ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவார். அவர் ஒரு மேட்ச் வின்னர். நீங்கள் ஒருநாள், டி20 போட்டிகள் அல்லது டெஸ்ட் போட்டிகளைப் பற்றி பேசினாலும், நீங்கள் அவரிடம் கேட்ட அனைத்தையும் செய்கிறார். அவரது பேட்டிங் மேம்பட்டுவிட்டது. ஃபீல்டிங் வேற லெவலில் உள்ளது" என்று ஆகாஷ் சோப்ரா புகழ்ந்து தள்ளியுள்ளார்.

டோட்டல் சைலன்ட்

டோட்டல் சைலன்ட்

சஞ்சய் மஞ்சரேக்கர் சமீபத்தில் அஷ்வினும், ஜடேஜாவும் அனைத்து அனைத்து நிலையிலும் சிறந்த வீரர்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்று சொன்னாலும் சொன்னார். சுனில் கவாஸ்கர் தொடங்கி லக்ஷ்மண், சடகோபன் ரமேஷ், ஆகாஷ் சோப்ரா என்று அடுத்தடுத்து மூத்த வீரர்கள் ஜடேஜாவையும், அஷ்வினையும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மஞ்சரேக்கர் இப்போது டோட்டல் சைலன்ட்.

Story first published: Wednesday, June 16, 2021, 19:34 [IST]
Other articles published on Jun 16, 2021
English summary
Aakash Chopra about Ravindra Jadeja's career - ஜடேஜா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X