For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அட அவங்கல யாருமே கண்டுக்கல”.. சைலண்டாக ஒதுக்கப்பட்ட 3 வீரர்கள்”.. பிசிசிஐக்கு சீனியர் கண்டனம்!

மும்பை: இந்திய அணியில் சத்தமே இல்லாமல் முக்கிய வீரர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?

வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது.

ஒதுக்கப்பட்ட வீரர்கள்

ஒதுக்கப்பட்ட வீரர்கள்

இந்த முறை முன்னணி வீரர்கள் சிலர் ஓரம்கட்டிவிட்டு எதிர்பார்க்காத சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். அதன்படி ரவி பிஷ்னாய் அறிமுகமாகியுள்ளார். குல்தீப் யாதவ், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்குள் நுழைகின்றன. இதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, முகமது ஷமி போன்ற வீரர்கள் தொடரில் இருந்து வெளியேற்றபட்டுள்ளனர்.

 ஆகாஷ் சோப்ரா கண்டனம்

ஆகாஷ் சோப்ரா கண்டனம்

இந்நிலையில் இதற்கு ஆகாஷ் சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அஸ்வின் இன்னும் 1.5 மாதத்திற்கு அணியில் சேர்க்கப்படமாட்டார் எனத்தெரிகிறது. ஆனால் இதனை சைலண்டாக வைத்துள்ளனர். ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இஷான் கிஷானுக்கும் ஒரு தொடரில் தான் வாய்ப்பு கொடுத்துள்ளனர். எனினும் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவது சந்தேகம். இதன் மூலம் பிசிசிஐ என்ன மனநிலையில் இருக்கிறதென்றே புரியவில்லை.

டி20 உலகக்கோப்பை வீரர்கள்

டி20 உலகக்கோப்பை வீரர்கள்

ஏனென்றால் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் வீரர்கள் சில நாட்களுக்கு முன்பு நடந்த டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றவர்கள். ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி குறித்த ஆலோசனையை கூட யாருமே செய்யவில்லை. தற்போது பிசிசிஐ-க்கு ரவி பிஷ்னாய் தேவைப்படுபவர் ஆகிவிட்டார். அவரையாவது ஓரம் கட்டாமல், தொடர்ந்து பயன்படுத்துங்கள் என ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2022 Auction: I Feel Faf du Plessis Will Go Back To CSK - Aakash Chopra | Oneindia Tamil
உண்மை காரணம்

உண்மை காரணம்

டி20 உலகக்கோப்பை தொடர் முதல் சிறப்பான கம்பேக் கொடுத்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வினால் தென்னாப்பிரிக்கா தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதுமட்டுமல்லாமல் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

Story first published: Thursday, January 27, 2022, 16:18 [IST]
Other articles published on Jan 27, 2022
English summary
Aakash Chopra dissappointed with BCCI, after dropped the big names in WI series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X