For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், சேவாக்கே செய்தனர், உங்களுக்கு என்ன? சஞ்சு சாம்சனை ஒதுக்கும் சர்ச்சை.. ஆகாஷ் சோப்ரா பளார்!

மும்பை: சச்சின், சேவாக் ஆகியோருக்கு இருந்த பிரச்சினைகள் தற்போது இந்திய அணியில் மீண்டும் தலைதூக்கி இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என பின் தங்கியிருக்கிறது.

இந்திய அணியின் தோல்வியை விட ரசிகர்களுக்கு பெரிய கவலையாக இருப்பது, சஞ்சு சாம்சனை அணிக்குள் சேர்க்காமல் ஒதுக்கி வைத்திருப்பது தான்.

பும்ரா வந்தாலும் எந்த பயனும் இல்ல.. காரணத்தை குறிப்பிட்டு ஆகாஷ் சோப்ரா திட்டவட்டம்.. IND vs AUS பும்ரா வந்தாலும் எந்த பயனும் இல்ல.. காரணத்தை குறிப்பிட்டு ஆகாஷ் சோப்ரா திட்டவட்டம்.. IND vs AUS

சஞ்சு சாம்சன் சர்ச்சை

சஞ்சு சாம்சன் சர்ச்சை

இதுகுறித்து விளக்கம் தந்திருந்த இந்திய கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள், அணியின் ப்ளேயிங் 11ல் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பதை விட, பவுலிங்கும் தெரிந்த ஒரு நல்ல ஹிட்டர் தேவை. எனவே பவுலிங் வேண்டும் என்ற காரணத்திற்காக தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கூறுகின்றனர். இதை ரசிகர்களும் ஏற்காமல் விமர்சித்து வருகின்றனர்.

ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆகாஷ் சோப்ரா முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார். அதில், இந்திய அணியில் முன்பெல்லாம் டாப் ஆர்டரில் அதிரடி காட்டிய சேவாக், யுவ்ராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் பவுலிங் வீசுவார்கள். ஆனால் தற்போது டாப் ஆர்டரில் இருந்தாலே பந்துவீசுவதில்லை. வலைப்பயிற்சியில் முயற்சி செய்துக்கூட பார்ப்பதில்லை.

பவுலிங்கை மறந்துவிட்டனர்

பவுலிங்கை மறந்துவிட்டனர்

உள்ளூர் போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என இரண்டையும் செய்யும் வீரர்கள், இந்திய அணிக்கு வந்தவுடன் வலைப்பயிற்சியில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கிற்கு மட்டுமே தயார் ஆகின்றனர். இதற்கு என்ன காரணம் என்றே புரியவில்லை. ஆனால் இதுதான் குழப்பங்களுக்கு முக்கிய காரணம். ஆனால் பவுலர்கள் மேம்பட்டு வருகிறார்கள் என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நல்ல விஷயமாகும்.

பவுலர்களுக்கு சாதகம்

பவுலர்களுக்கு சாதகம்

இந்திய அணி தற்போதெல்லாம் எங்கு சென்றாலும் 4 வலைப்பயிற்சி பவுலர்கள் மற்றும் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்டை அழைத்து செல்கிறார்கள். இவர்களின் உதவியால் பந்துவீச்சாளர்கள் நன்கு பேட்டிங் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் இருவருமே ஒரே மாதிரியான செயல்பாட்டை தான் கொடுக்கின்றனர். ப்யூர் பேட்ஸ்மேன் தேவைப்படுவதே இல்லை என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, November 29, 2022, 13:22 [IST]
Other articles published on Nov 29, 2022
English summary
Ex - Indian Cricketer Aakash chopra raised a voice in the sanju samson Controversy ahead of India vs New zealand 3rd ODI match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X