For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அயர்லாந்து தொடரில் ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு இல்லை.. உண்மையை சொன்ன ஆகாஷ் சோப்ரா.. காரணம் சரி தான்

மும்பை: ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வரும் 26 மற்றும் 28ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதற்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இல்லை.

அதற்கு காரணம், இவ்விரு வீரர்களும் டெஸ்ட் அணியில் விளையாடுவதால் , டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

ஹர்திக் பாண்டியாவை மாற்றியது எது? தோனி அண்ணன் சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ச்சியில் ஹர்திக்ஹர்திக் பாண்டியாவை மாற்றியது எது? தோனி அண்ணன் சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ச்சியில் ஹர்திக்

ராகுல் திரிபாதி

ராகுல் திரிபாதி

31 வயதான ராகுல் திரிபாதி, கடந்த பல சீசன்களாக ஐபிஎல் தொடரில் ரன் குவித்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த சீசனிலும் கூட ஐதராபாத் அணிக்கு விளையாடிய திரிபாதி பல மிரட்டல் இன்னிங்சை ஆடினார். 14 போட்டியில் 413 ரன்கள் குவித்த திரிபாதிக்கு தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆகாஷ் சோப்ரா கருத்து

ஆகாஷ் சோப்ரா கருத்து

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டியில் விளையாடி 458 ரன்கள் சஞ்சு சாம்சன் விளாசி இருந்தார்.அவருக்கும் தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு தரப்படவில்லை. தற்போது இருவரும் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்விருவருக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேககம் தான் என்று குண்டை தூக்கி போட்டுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

வாய்ப்பு கிடையாது

வாய்ப்பு கிடையாது

அயர்லாந்து அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் 9 பேர் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்க தொடரில் தேர்வாகியுள்ள இந்திய அணியில் ஏற்கனவே தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர் ஆகியாருக்கு வாய்ப்பு தரப்படவில்லை, இதனால், ஏற்கனவே அணியில் இருந்த இவ்விருவருக்கு மட்டும் தான் அயர்லாந்து தொடரில் இந்திய அணி முன்னுரிமை வழங்கும்.

Recommended Video

Rahul Tripathi-க்கு Maiden Call-Up! 6 வருஷ காத்திருப்பு! | Aanee's Appeal | *Cricket
தேவையே இல்லை

தேவையே இல்லை

.அணியில் ஏற்கனவே ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருப்பதால் வெங்கடேஷ் ஐயருக்கும், அக்சர் பட்டேல் இருப்பதால் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் இருப்பது தேவையற்றது. அதற்கு பதில் ராகுல் திரிபாதியை தொடக்கத்திலும், சஞ்சு சாம்சனை நடுவரிசையிலும் தென்னாப்பிரிக்க தொடரிலேயே பிசிசிஐ வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லை.

Story first published: Saturday, June 18, 2022, 20:09 [IST]
Other articles published on Jun 18, 2022
English summary
Aakash chopra reveals Rahul tipathi wont get chance vs Ireland t20 series அயர்லாந்து தொடரில் ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு இல்லை.. உண்மையை சொன்ன ஆகாஷ் சோப்ரா.. காரணம் சரி தான்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X