‘விபரீத விளையாட்டு’ கோலி எடுத்த ரிஸ்க்கான முடிவு அணிக்கு தான் ஆபத்து.. எச்சரிக்கும் முன்னாள் வீரர்!

இந்திய அணிக்காக விராட் கோலி எடுத்திருக்கும் முடிவு ஆபத்தானது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.

T20 World Cup-ல் Opening களமிறங்க திட்டம் போட்ட Virat Kohli.. எச்சரிக்கும் Aakash Chopra

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு செல்ல வாய்ப்பு.. இதனால் தான் பிசிசிஐ வாய்திறக்கவில்லை.. அதிகாரி தகவல் பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு செல்ல வாய்ப்பு.. இதனால் தான் பிசிசிஐ வாய்திறக்கவில்லை.. அதிகாரி தகவல்

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படும் என ஐசிசி ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஓப்பனர்கள்

ஓப்பனர்கள்

இந்த தொடருக்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்திய அணியின் ஓப்பனராக யார் களமிறங்குவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்குவார்கள். இந்த முறை கே.எல்.ராகுலும் போட்டியில் உள்ளார். இந்நிலையில் விராட் கோலி தற்போது ஓப்பனிங்க் இடத்திற்கு போட்டி போடுகிறார்.

கோலியின் திடீர் முடிவு

கோலியின் திடீர் முடிவு

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி ஓபனராக களமிறங்கினார். அதில் சிறப்பாகவும் செயல்பட்டார். பின்னர் பேசிய அவர் தேவை ஏற்படுமாயின் நான் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவேன் என அதிரடியாக அறிவித்து இருந்தார். இதன்மூலம், டி20 உலகக் கோப்பையில் கோலி ஓபனராக களமிறங்குவது கிட்டதட்ட உறுதியானது.

ஆகாஷ் சோப்ரா

சோப்ரா எதிர்ப்பு

சோப்ரா எதிர்ப்பு

இந்நிலையில் அதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் கோலி, வழக்கமான மூன்றாவது இடத்தில் களமிறங்கினால்தான் சரியாக இருக்கும். அதுவே அணிக்கு நல்ல சமநிலையைத் தரும். ரோகித்துடன், கே.எல்.ராகுலை களமிறக்க வேண்டும். அவர்கள் இருவரும் ஓபனர்களாக களமிறங்கும் பட்சத்தில் அடுத்தடுத்து கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் மிடில் வரிசையில் களமிறங்க ஏதுவாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.

கோலியின் முடிவுக்கு காரணம்

கோலியின் முடிவுக்கு காரணம்

கே.எல். ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கடந்த சில தொடர்களில் ஓப்பனிங் களமிறங்கி சொதப்பி வருகின்றனர். எனவே அவர்களை இனி நம்ப வேண்டாம் என்பதற்காகவே விராட் கோலி ஓப்பனிங் களமிறங்குகிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க கூடாது என ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரிஸ்க்கான

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Aakash Chopra selects the Team India's openers for T20 World Cup
Story first published: Thursday, July 8, 2021, 11:50 [IST]
Other articles published on Jul 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X