For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுப்மன் கில்லை விட்டுடாதீங்க.அப்புறம் ரோகித் சர்மா விவகாரம் மாதிரி ஆயிடும்.ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

டெல்லி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்ற அனைவரையும் விட்டுவிட்டு சுப்மன் கில்லை தன்னுடைய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் இளம் கேப்டனாக நியமக்கப்பட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய அணியை ஐபிஎல் 2020 சீசனின் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சுப்மன் கில்லை மற்ற அணிக்கு செல்ல அனுமதித்தால் ரோகித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலிருந்து மும்பை அணிக்கு வந்து 5 கோப்பைகளை வெற்றி கொண்ட நிலையே உருவாகும் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மாற்றப்பட்ட கேப்டன் பொறுப்பு

மாற்றப்பட்ட கேப்டன் பொறுப்பு

ஐபிஎல் 2020 சீசனின் ஆரம்பத்தில் அந்த அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். ஆனால் தொடரின் இடையில் இயான் மார்கனுக்கு அந்த பொறுப்பு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த சீசனில் முக்கிய அணியாக செயல்படும் என்று கருதப்பட்ட அந்த அணி இடையிலேயே தொடரிலிருந்து விலகியது.

ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தல்

ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தல்

இந்நிலையில் கேகேஆர் தனது கேப்டன் பொறுப்பிற்காக சுனில் நரேன், பாட் கமின்ஸ், இயான் மார்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை கருத்தில் கொள்ளாமல் 21 வயது சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

டெல்லி கேபிடல்ஸ் தனது அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரை நியமித்துள்ளது. இதையடுத்து அந்த அணி ஐபிஎல் 2020 சீசனின் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டங்களை பதிவு செய்து, 2வது தகுதிச்சுற்று போட்டியிலும் தன்னை நிரூபித்து இறுதிப்போட்டி வரை முன்னேறி தொடரின் ரன்னர் அப்பாக திகழ்கிறது.

ரஸ்ஸல், சக்ரவர்த்திக்கு முன்னுரிமை

ரஸ்ஸல், சக்ரவர்த்திக்கு முன்னுரிமை

இந்நிலையில் டெல்லி அணியை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு, கேகேஆர் அணியும் இளம் வீரர் சுப்மன் கில்லை தனது அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அணியில் முக்கியமான சுப்மன் கில், ஆன்ட்ரே ரஸ்ஸல் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரை அணியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எடுத்துக்காட்டிய ஆகாஷ் சோப்ரா

எடுத்துக்காட்டிய ஆகாஷ் சோப்ரா

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக கடந்த 2009ல் ரோகித் சர்மா ஐபிஎல் டைட்டிலை பெற்றுத் தந்தார். பின்பு மும்பை அணியில் சேர்ந்த அவர் 5 டைட்டிலை அந்த அணிக்காக பெற்றுத் தந்துள்ளார். இதேபோல சுப்மன் கில்லை கேகேஆர் அணி மற்ற அணிக்கு விட்டு கொடுத்துவிட்டால், பின்பு அவர் அந்த அணிக்காக சிறப்பாக செயல்புரிவார் என்றும் சோப்ரா கூறினார்.

Story first published: Tuesday, November 24, 2020, 17:54 [IST]
Other articles published on Nov 24, 2020
English summary
If they let him go to another team, then Shubman Gill might do for that team -Aakash Chopra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X