For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அஸ்வின் இனி தேற மாட்டார்”.. காரணங்களை அடுக்கிய ஆகாஷ் சோப்ரா.. மாற்று வீரர் யார்?

மும்பை: ரவிச்சந்திரன் அஸ்வின் இனி இந்திய அணிக்கு தேவைப்பட மாட்டார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படையாக கூறியுள்ளார்.

Recommended Video

IPL 2022 Auction: I Feel Faf du Plessis Will Go Back To CSK - Aakash Chopra | Oneindia Tamil

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1 - 2 என தோல்வியடைந்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வைட் வாஷ் ஆனது.

இந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு, பவுலர்கள் சரிவர விக்கெட்டுகள் எடுக்காமல், ரன்களை வாரி வழங்கியதே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அஸ்வின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளனர் முன்னாள் வீரர்கள்.

“நியாயமே இல்லாம நடந்துக்குறாங்க” இளம் வீரரை புறக்கணித்த இந்திய அணி.. விளாசிய ஆகாஷ் சோப்ரா! “நியாயமே இல்லாம நடந்துக்குறாங்க” இளம் வீரரை புறக்கணித்த இந்திய அணி.. விளாசிய ஆகாஷ் சோப்ரா!

ஸ்பின்னர்களின் தோல்வி

ஸ்பின்னர்களின் தோல்வி

இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் சோபித்தது போன்று 50 ஓவர் போட்டியில் அஸ்வினால் கம்பேக் கொடுக்க முடியவில்லை. அவருக்கு உறுதுணையாக வந்த சாஹல் மற்றும் ஜெயந்த் யாதவும் கைக்கொடுக்கவில்லை.

அஸ்வின் வேண்டாம்

அஸ்வின் வேண்டாம்

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, ஒருநாள் போட்டித்தொடரில் அஸ்வின் - சஹால் ஆகியோர் சேர்ந்தே மூன்று போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகள் தான் எடுத்துள்ளனர். ஜெயந்த் யாதவும் பெரிதாக ஏதும் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் இனி ஒருநாள் கிரிக்கெட்டிற்கு சரிபட்டு வரமாட்டார்கள்.

மாற்று வீரர்கள் யார்

மாற்று வீரர்கள் யார்

இந்திய அணிக்கு மீண்டும் குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் ஜோடியை கொண்டு வர வேண்டும். எதிரணி ஸ்பின்னர்கள் ஒரு போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் நமது ஸ்பின்னர்கள் மொத்த தொடரிலேயே 3 விக்கெட்டுகள் தான் எடுத்தனர். எனவே அஸ்வின் - ஜெய்ந்தை நிக்கிவிட்டு, மாற்று வீரர்களை களமிறக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

 இந்திய அணிக்கு நன்மை

இந்திய அணிக்கு நன்மை

ஜடேஜாவின் இடத்தை குல்தீப் யாதவ் நிரப்புவார். மிடில் ஓவர்களில் இந்திய ஸ்பின்னர்களால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். 10 ஓவர்களில் 70 ரன்களை கூட கொடுக்கலாம். ஆனால் அதில் 3 விக்கெட்டுகளையாவது எடுத்திருந்தால் தான் அது அணிக்கு நன்மையாக இருக்கும் என கூறியுள்ளார்.

Story first published: Tuesday, January 25, 2022, 12:31 [IST]
Other articles published on Jan 25, 2022
English summary
Former cricketer Aakash Chopra thinks Ashwin, Jayant yadhav not long-term ODI players for India, names kuldeep to replace
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X