For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கை எடுத்த அவசர முடிவு... போட்டி நடத்துவதே வேஸ்ட்.. அதிருப்தியில் முன்னாள் வீரர் - விவரம்!

கொழும்பு: இந்தியா - இலங்கை தொடர் எந்தவித பிரயோஜனமும் இல்லாதது என முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

Recommended Video

Alternate Squad-ஐ ஏன் பயன்படுத்தவில்லை? Ind vs Sl தொடர் தள்ளிப்போனதுக்கு இதான் காரணம்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13ம் தேதி தொடங்கவிருந்தது.

மெகா ஏலம்: CSK தக்க வைக்கும் மெகா ஏலம்: CSK தக்க வைக்கும்

ஆனால் இலங்கை அணியில் கொரோனா பரவியதால் இந்த போட்டிகள் வரும் ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா

சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, கடந்த 6ம் தேதி நாடு திரும்பியது. தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

இலங்கை யோசனை

இலங்கை யோசனை

இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து திரும்பிய மொத்த அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்னெச்சிரிக்கையாக இலங்கை ஏ அணி ஒன்றை உருவாக்கி பயிற்சி அளித்து வருகிறது. வரும் ஜூலை 18ம் தேதிக்குள் நிலைமை சீராக விட்டால் இந்திய ஏ அணியுடன் இலங்கையின் ஏ அணி தான் விளையாடும் என கூறப்படுகிறது.

இலங்கை ஏ அணி

இலங்கை ஏ அணி

இந்நிலையில் அந்த போட்டியினால் எந்தவித பயனும் இல்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சமீபத்தில் நடந்த இங்கிலாந்து - இலங்கை தொடரை பார்த்தால், அந்நாட்டின் முதல் தர அணியே மிகவும் பலவீனமாக உள்ளது. அது குறித்து யோசித்து பாருங்கள். 2ம் தர அணியுடன் போட்டியை நடத்தினால் எப்படி இருக்கும்.

சுவாரஸ்யமே இருக்காது

சுவாரஸ்யமே இருக்காது

இந்திய ஏ அணிக்கு எதிராக இலங்கையின் முதல் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கையின் ஏ அணியை களமிறக்கினால் ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமுமே இருக்காது. ஏனென்றால் இலங்கையின் மெயின் அணியை விட இந்தியாவின் ஏ அணி பலமானது ஆகும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Sunday, July 11, 2021, 22:10 [IST]
Other articles published on Jul 11, 2021
English summary
Aakash Chopra thinks if Sri Lanka fielded a second-string side against India will be a no-contest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X