For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க பண்ண காரியத்தால பாகிஸ்தான் மானமே போச்சு.. இப்படியா பண்ணுவாங்க.. விளாசிய முன்னாள் வீரர்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அன்பி வீரர்கள் பத்து பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்தது.

அந்த பத்து பேரில் ஒருவரான முகமது ஹபீஸ் தனக்கு கொரோனா வைரஸ் இல்லை என மறுபரிசோதனை செய்து அதை வெளியிட்டார்.

இந்த சம்பவத்தால் பாகிஸ்தானுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஆமீர் சோஹைல் விளாசி இருக்கிறார்.

20 பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து பயணம்... கைவிடப்பட்ட 10 கொரோனா பாதித்த வீரர்கள்20 பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து பயணம்... கைவிடப்பட்ட 10 கொரோனா பாதித்த வீரர்கள்

ஆறு பேருக்கு இல்லை

ஆறு பேருக்கு இல்லை

இது மட்டுமின்றி பத்து பாகிஸ்தான் வீரர்களில் ஆறு பேருக்கு இரண்டாவது பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. எப்படி ஆறு பேரின் முதல் பரிசோதனை முடிவுகள் தவறாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளது. அதற்காக பாகிஸ்தான் அணி தங்கள் நாட்டில் பயிற்சி செய்து வந்தது.

பத்து வீரர்களுக்கு பாதிப்பு

பத்து வீரர்களுக்கு பாதிப்பு

இங்கிலாந்து கிளம்பும் முன் எடுக்கப்பட்ட முதல் கொரோனா வைரஸ் பரிசோதனையில் பத்து வீரர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. அதனால், இங்கிலாந்து தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

முகமது ஹபீஸ்

முகமது ஹபீஸ்

இதன் இடையே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியான பத்து வீரர்களில் ஒருவரான முகமது ஹபீஸ் அடுத்த நாளே தனிப்பட்ட முறையில் பரிசோதனை செய்து தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதனை முடிவை ஆதாரமாக வெளியிட்டார்.

கேள்விகள்

கேள்விகள்

இதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எப்படி பரிசோதனை செய்தது? எப்படி பத்து பேருக்கு கொரோனா வைரஸ் என அறிவித்தது? அந்த பரிசோதனை சரியானதா? என கேள்விகள் எழுந்தது. மேலும், கிரிக்கெட் ஆடும் நாடுகள் அனைத்திலும் இந்த செய்தி பரவியது.

சிக்கலில் மாட்டிக் கொண்டது

சிக்கலில் மாட்டிக் கொண்டது

அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சிக்கலில் மாட்டிக் கொண்டது. முகமது ஹபீஸ் பொது வெளியில் இரண்டாவது பரிசோதனை முடிவை வெளியிட்டது தவறு என கூறியது. இந்த நிலையில், முன்னாள் கேப்டன் ஆமிர் சோஹைல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பாய்ந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு அவமானம்

பாகிஸ்தானுக்கு அவமானம்

"முகமது ஹபீஸ் கொரோனா வைரஸ் பரிசோதனை தொடர்பான குழப்பம் பாகிஸ்தானுக்கு அவமானம் ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது. இதை எப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இத்தனை மோசமாக கையாண்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.: என்றார் சோஹைல்.

பல்வேறு இடங்களில் பரிசோதனை

பல்வேறு இடங்களில் பரிசோதனை

"அணி அறிவிக்கப்பட்ட பின் ஒரே இடத்தில் பரிசோதனை செய்யாமல் வீரர்கள் பல்வேறு இடங்களில் பரிசோதனை செய்ய வைக்கப்பட்டனர். அதனால், தான் மாறுபட்ட முடிவுகள் கிடைத்துள்ளன. முடிவுகள் வந்த உடன் துள்ளிக் குதிக்காமல் அவர்கள் மீண்டும் அதை உறுதி செய்து இருக்க வேண்டும்" என்றார் அவர்.

தவறு

தவறு

மேலும், முகமது ஹபீஸ்-க்கு கொரோனா வைரஸ் இருப்பதாக போர்டு கூறிய நிலையில், அவர் தனக்கு பாதிப்பு இல்லை என மறு பரிசோதனை செய்த பின் பொது வெளியில் அறிவிக்காமல் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் தவறு என்றார் ஆமிர் சோஹைல்.

இங்கிலாந்து கிளம்பிய வீரர்கள்

இங்கிலாந்து கிளம்பிய வீரர்கள்

இங்கிலாந்து செல்லும் முன் நடத்தப்பட்ட இரண்டாவது பரிசோதனையில், ஏற்கனவே பாதிப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்ட பத்து பேரில், ஆறு பேருக்கு பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. எனினும், அந்த பத்து வீரர்கள் தவிர 20 வீரர்கள் இங்கிலாந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.

Story first published: Sunday, June 28, 2020, 16:51 [IST]
Other articles published on Jun 28, 2020
English summary
Aamer Sohail slams PCB for Mohammad Hafeez COVID-19 tests issue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X