For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. அதிர்ஷ்டத்தால் நியூசி,யை இந்தியா வீழ்த்தியதா??.. பாக். சீனியர் விளாசல்!

லாகூர்: நியூசிலாந்து அணியுடனான தொடரை வென்றதால் இந்திய அணி மகிழ்ச்சியடைய வேண்டாம் என்றும், ஒரு முக்கிய வீக்னஸை பயன்படுத்தி தான் வெற்றி கண்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. படு விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா 3- 0 என ஒயிட் வாஷ் செய்தது.

இதில் இந்திய அணி தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் அடித்து வாண வேடிக்கை காட்டியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் இந்திய அணி முடலிடத்தையும் பிடித்தது.

அவர் இல்லைனா இந்தியா ஜெயிக்காது.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. ரோகித்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை! அவர் இல்லைனா இந்தியா ஜெயிக்காது.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. ரோகித்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை!

 நியூசி, தொடர்

நியூசி, தொடர்

இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தான் இந்த தொடர்கள் நடந்து வருகிறது. அதன்படி நியூசிலாந்து தொடரை பயன்படுத்தி இந்திய அணியில் இருந்த பல பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக சதம் அடிக்காமல் இருந்த ரோகித் சர்மா கம்பேக் கொடுத்தார். இதே போல சூர்யகுமார் யாதவும் 50 ஓவர் வடிவத்திற்கு மாறிவிட்டார்.

பாக். சீனியர் விமர்சனம்

பாக். சீனியர் விமர்சனம்

இந்நிலையில் இந்த வெற்றியை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி நிறைய ரன்களை அடித்ததற்கு நியூசிலாந்தின் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம். பேட்டிங் திறமை கிடையாது. இதுவே பாகிஸ்தானின் பவுலிங்காக இருந்திருந்தால் செய்திருக்க முடியாது.

5 நட்சத்திர பவுலர்கள்

5 நட்சத்திர பவுலர்கள்

உலகக்கோப்பை தொடரின் போது ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரஃப், நசீம் ஷா போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் முழு ஃபிட்னஸுடன் பாகிஸ்தான் அணிக்கு திரும்பி விடுவார்கள். மேலும் சதாப் கான், முகமது நவாஸ் போன்ற சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த 5 பேரால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களே தேவைப்படமாட்டார்கள்.

 சமாளிக்க முடியாது

சமாளிக்க முடியாது

இதனால் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி ஒருவேளை 300 ரன்களை அடிக்கும் பட்சத்தில், இந்தியா உட்பட எந்த எதிரணியாக இருந்தாலும் அதனை விரட்டுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும் என கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர், நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 31, 2023, 18:55 [IST]
Other articles published on Jan 31, 2023
English summary
Former pakistan cricketer Aaqib Javed feels Pakistan will not have any trouble playing on Indian pitches at world cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X