ரசிகர் எனக்கூறி கொள்ளாதீர்கள்... பின்ச் மனைவியை வம்பிழுக்கும் ரசிகர்கள்... காட்டமாக வந்த பதிலடி

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் மீது உள்ள கோபத்தால் அவரது மனைவிக்கு சமூகவலைதளங்களில் கொலை மற்றும் பாலியல் மிரட்டல்களை ரசிகர்கள் விடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் சரியாக செயல்படவில்லை. அவரின் ஸ்கோர்கள் மிகவும் மோசமானதாக உள்ளன.

இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்!

இந்நிலையில் அவர் மீதுள்ள கோபத்தால், அவரது மனைவிக்கு ரசிகர்கள் மிரட்டல் விடுத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டி20 தொடர்

டி20 தொடர்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையில் சர்வதேச டி20 போட்டித் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளில் முறையே 1 மற்றும் 12 ரன்களை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் எடுத்துள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாருக்கு பின்னர் ஸ்மித்திற்கு பதிலாக பின்ச் தான் டி20 அணி கேப்டனான செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் கேப்டன்சியில் நியூசிலாந்துடன் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வியை பெற்றுள்ளது. கேப்டனாக அவரும் சிறப்பா ஆடவில்லை. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

மனைவி புகார்

மனைவி புகார்

இதன் காரணமாக பின்ச்-ன் மனைவி எமிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள எமி, இணையத்தில் போர்க்கொடி தூக்குபவர்கள் அவர்களின் நிஜ வாழ்க்கையை பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் ரசிகர் என கூறிக்கொள்ளாதீர்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில் அதிக ரன் அடித்த வீரராக இருந்த பின்ச், டி20 போட்டி முதல் பிக் பாஷ், நியூசிலாந்து தொடர் என எதிலும் சரியாக ஆடவில்லை. பிக்பாஷ் தொடரில் 13 இன்னிங்சில் ஆடிய அவர் வெறும் 179 ரன்களே எடுத்தார். இதனால் ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் கண்டுக்கொள்ளவில்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Aaron Finch's wife faces online threats after his Poor Performance
Story first published: Saturday, February 27, 2021, 18:09 [IST]
Other articles published on Feb 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X