For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுடன் ஏன் தோற்றோம்… காரணம் இது தான்.. உண்மையை சொல்லும் ஆரோன் பின்ச்

Recommended Video

Finch explains on loss against India | இந்தியாவுடன் தோல்விக்கு காரணம் இது தான் : ஆரோன் பின்ச்

நாக்பூர்:பந்துவீச்சிலும் சிறப்பாகவே செயல்பட்ட போதிலும்... வெற்றிக்கு எங்களின் இந்த பங்களிப்பு போதாது என்பதால் தோற்றுவிட்டோம் என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி 20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற டி 20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

 கடைசி ஓவரை விஜய் ஷங்கர் ஏன் வீசினார்? 3 பந்துகளிலேயே வெற்றி தேடிக் கொடுத்தது எப்படி? கடைசி ஓவரை விஜய் ஷங்கர் ஏன் வீசினார்? 3 பந்துகளிலேயே வெற்றி தேடிக் கொடுத்தது எப்படி?

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

பந்துவீச்சு தேர்வு

பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. கேப்டன் கோஹ்லி 116 ரன்களும், விஜய் சங்கர் 46 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டம்

தொடக்க ஆட்டம்

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆரோன் பின்ச்சும், உஸ்மான் கவாஜாவும் பொறுப்புடன் ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை தாண்டியது.

37 ரன்னில் அவுட்

37 ரன்னில் அவுட்

அணியின் எண்ணிக்கை 83 ஆக இருக்கும்போது ஆரோன் பின்ச் 37 ரன்னில் அவுட்டானார். அவரை கவாஜாவும் 38 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் போக்கு

ஆட்டத்தின் போக்கு

அடுத்து இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் பொறுப்புடன் ஆடினார். அவர் 48 ரன்னில் ரன் அவுட்டானது ஆட்டத்தை போக்கை மாற்றியது. ஹேண்ட்ஸ் கோமுக்கு ஸ்டாய்னிஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் அரை சதமடித்து இறுதி வரை போராடி 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

 242 ரன்களில் ஆல் அவுட்

242 ரன்களில் ஆல் அவுட்

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் 500வது வெற்றி இதுவாகும்.

நூலிழையில் தோற்றோம்

நூலிழையில் தோற்றோம்

இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பேசியதாவது:இது மிகவும் பரப்பான போட்டி, நாங்கள் வெற்றியை நூலிழையில் தான் தவறவிட்டுள்ளோம். இதுவே எங்களுக்கு மிகப்பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

பாடத்தை கற்றோம்

பாடத்தை கற்றோம்

ஸ்டோனிஸ் மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த தோல்வியில் இருந்து நாங்கள் அனைவரும் நிறைய விஷயங்களை கற்றுள்ளோம்.

சவாலான போட்டி

சவாலான போட்டி

இந்திய அணிக்கு எதிரான போட்டி என்பது சவாலானது. அதிலும் சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது எவ்வளவு கடினம் என்பது தெரியும்.

ஸ்டோனிஸ் முன்பே ரிக்ஸ் எடுத்திருந்தால் வெற்றியின் அருகில் வரை நாங்கள் வந்திருக்க மாட்டோம். நிச்சயம் ஸ்டோனிஸின் ஆட்டம் பாராட்டப்பட வேண்டியதே.

பங்களிப்பு போதாது

பங்களிப்பு போதாது

விராட் கோலி தனித்துவம் மிக்கவர். நாங்கள் பந்துவீச்சிலும் சிறப்பாகவே செயல்பட்டோம் ஆனால் வெற்றிக்கு எங்களின் இந்த பங்களிப்பு போதாது என்பதை உணர்ந்துள்ளோம் என்றார்.

Story first published: Wednesday, March 6, 2019, 12:03 [IST]
Other articles published on Mar 6, 2019
English summary
Australia captain Captain Aaron Pinch said that we have failed because our role in the victory is not good enough even in the bowling.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X