For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

24 பந்தில் 61 ரன்.. எவ்ளோ நாள் ஆச்சு.. இப்படி ஒரு பேட்டிங் பார்த்து.. மிரள வைத்த ஏபி டிவில்லியர்ஸ்!

ஜோஹன்னஸ்பர்க் : நீண்ட காலம் கழித்து கிரிக்கெட் களத்தில் அதிரடி பேட்டிங்கில் கலக்கினார் ஏபி டிவில்லியர்ஸ்.

"3டிசி" என்ற மூன்று அணிகள் ஒரே போட்டியில் ஆடும் புதிய கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு.

அந்த போட்டியில் தான் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஏபி டிவில்லியர்ஸ். மேலும், அவரது அணிதான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலியை பார்க்காம இருக்க முடியலை.. சைலன்ட்டாக ஆர்ச்சர் செய்த காரியம்.. அதிரடி நீக்கம்.. கசிந்த தகவல்காதலியை பார்க்காம இருக்க முடியலை.. சைலன்ட்டாக ஆர்ச்சர் செய்த காரியம்.. அதிரடி நீக்கம்.. கசிந்த தகவல்

ஒரே போட்டியில் மூன்று அணிகள்

ஒரே போட்டியில் மூன்று அணிகள்

ஒரே போட்டியில் மூன்று அணிகள் மோதும் புதிய கிரிக்கெட் முறையை அறிமுகம் செய்தது தென்னாப்பிரிக்கா. இதில் முதலில் ஒரு அணி ஆறு ஓவர்கள் பேட்டிங் செய்யும். அப்போது இரண்டாம் அணி பந்து வீசும். அடுத்து மூன்றாம் அணி பேட்டிங் செய்யும். முதல் அணி பந்து வீசும். அடுத்து இரண்டாம் அணி பேட்டிங் செய்யும், மூன்றாம் அணி பந்துவீசும்.

ஒரே இன்னிங்க்ஸ்

ஒரே இன்னிங்க்ஸ்

பின் மீண்டும் மூன்று அணிகளும் மாற்றி, மாற்றி ஆறு ஓவர்கள் பேட்டிங் செய்யும். இரண்டு இன்னிங்க்ஸ் கிடையாது, ஒரே இன்னிங்சை இரண்டு பகுதிகளாக ஆட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முடிவில் அதிக ரன்கள் எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

எட்டு வீரர்கள்

எட்டு வீரர்கள்

இந்த வித்தியாசமான கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் எட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெறுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு கண்காட்சி போட்டியாக இந்த மோதல் நேற்று நடந்தது. கிங்க்பிஷர்ஸ், கைட்ஸ், ஈகிள்ஸ் என மூன்று அணிகள் மோதின.

முதல் பேட்டிங்

முதல் பேட்டிங்

முதலில் கிங்க்பிஷர்ஸ் அணி பேட்டிங் செய்தது. கைட்ஸ் அணி பீல்டிங் செய்தது. ஏபி டில்லியர்ஸ்-இன் ஈகிள்ஸ் அணி மூன்றாவது அணியாக வெளியில் இருந்தது. கிங்க்பிஷர்ஸ் அணி அணி முதல் ஆறு ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது.

ஈகிள்ஸ் அணி

ஈகிள்ஸ் அணி

அடுத்து ஈகிள்ஸ் அணி ஆடியது. அந்த அணி 6 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தது. ஏபி டிவில்லியர்ஸ் 11, மார்கிரம் 47 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். அடுத்து கைட்ஸ் அணி பேட்டிங் ஆடி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்தது.

ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி

ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி

இரண்டாவது பகுதியில் முதல் பகுதியில் அதிக ரன்கள் எடுத்த அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் ஈகிள்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடினார். 24 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார் அவர்.

மார்கிரம்

மார்கிரம்

மார்கிரம் 33 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். நீண்ட காலம் கழித்து சிறப்பான அதிரடி ஆட்டம் ஆடியது இந்த ஜோடி. இணையத்தில் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை வெகுவாக பாராட்டினர். 12 ஓவர்கள் முடிவில் ஈகிள்ஸ் அணி 160 ரன்கள் எடுத்து வியக்க வைத்தது.

ஈகிள்ஸ் அணி வெற்றி

ஈகிள்ஸ் அணி வெற்றி

அடுத்து கைட்ஸ் அணி பேட்டிங் ஆடியது. அந்த அணி 12 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தது. மூன்றாவதாக பேட்டிங் ஆடிய கிங்க்பிஷர்ஸ் அணி 12 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து இருந்தது. அதிக ரன்கள் எடுத்த ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்றது.

மீண்டும் நடக்குமா?

மீண்டும் நடக்குமா?

இந்த கண்காட்சி போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ்-இன் ஈகிள்ஸ் அணி தங்கமும், கைட்ஸ் அணி வெள்ளியும், கிங்க்பிஷர்ஸ் அணி வெண்கலமும் வென்றன. இனியும் 3டிசி போட்டிகள் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, July 19, 2020, 11:38 [IST]
Other articles published on Jul 19, 2020
English summary
AB de Villiers scored a 24 ball 61 runs in 3TC match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X