For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிரணி வீரர்களை சீண்டறது கீழ்த்தரமானது.. இதுமூலமா நம்மோட பலவீனம்தான் வெளிப்படும்!

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் டிம் பெய்ன் இந்திய பெளலர் அஸ்வினை சீண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல சிராஜ் உள்ளிட்ட வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவாத துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 4வது போட்டியில வெற்றிக்கு போராடும் இந்தியா... குறுக்கால மழை வரும்னு சொல்றாங்க! 4வது போட்டியில வெற்றிக்கு போராடும் இந்தியா... குறுக்கால மழை வரும்னு சொல்றாங்க!

இந்நிலையில் எதிரணி வீரர்களை சீண்டுவது கீழ்த்தரமானது என்றும் இதன்மூலம் நமது பலவீனமே வெளிப்படும் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் க்ரெக் சாப்பல் டிம் பெய்னுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அஸ்வினை சீண்டிய பெய்ன்

அஸ்வினை சீண்டிய பெய்ன்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பௌலர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். சிராஜ், சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்தில் ரசிகர்களால் இனவாத அடிப்படையிலான சீண்டல்களுக்கு உள்ளாகினர். போட்டியின்போது கேப்டன் டிம் பெய்ன், அஸ்வினை சீண்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரங்க மன்னிப்பு

பகிரங்க மன்னிப்பு

இதையடுத்து சர்வதேச அளவில் டிம் பெய்னிற்கு நெருக்கடி ஏற்பட்டது. எதரணி வீரர்களின் கவனத்தை சிதறிடிக்கும் நோக்கத்துடன் ஆஸ்திரேலிய வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து கேப்டன் டிம் பெய்ன் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

பலவீனமே வெளிப்படும்

பலவீனமே வெளிப்படும்

இந்நிலையில், இத்தகைய சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் மிகவும் கீழ்த்தரமானவை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் க்ரெக் சாப்பல் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் மூலம் நம்முடைய பலவீனமே வெளிப்படும் என்றும் அவர் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை மூலம் டிம் பெய்னிற்கு பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

பெய்னிற்கு சாப்பல் அறிவுரை

பெய்னிற்கு சாப்பல் அறிவுரை

இளம் தலைமுறை வீரர்களுக்கு தன்னுடைய பேட்டிங் மூலம் மிகச்சிறந்த உதாரணமாக டிம் பெய்ன் விளங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கேப் டவுனில் நடைபெற்ற போட்டிகளின்போது சிறப்பான தன்னம்பிக்கை மற்றும் நகைச்சுவையுடன் விளையாடியதை போல தொடர்ந்து அவர் செயல்பட வேண்டும் என்றும் சாப்பல் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Sunday, January 17, 2021, 13:58 [IST]
Other articles published on Jan 17, 2021
English summary
Abuse is not acceptable in any workplace and talk, in my opinion, is cheap -Chappell
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X