“சின்ன பையா.. ஒழுங்கா கிரிக்கெட் மட்டும் ஆடு” .. ரிஷப் பண்ட் மீது நடிகை காட்டம்.. காரசார பிரச்சினை!

மும்பை: ரிஷப் பண்ட் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு நடிகை ஊர்வசி ரவுத்தேலா காட்டமான பதிலடியை கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ரிஷப் பண்ட். நேற்று முதல் இவரின் பெயர் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம், பாலிவுட் திரைப்பட நடிகை ஊர்வசி ரவுத்தேலா கொடுத்த நேர்க்காணல் ஒன்று தான்.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

பரபரப்பு கருத்து

பரபரப்பு கருத்து

வளர்ந்து வரும் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா, சமீபத்தில் தமிழில் தி லெஜெண்ட் திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார். இவர் கொடுத்த நேர்க்காணல் ஒன்றில், "நான் டெல்லியில் படப்பிடிப்பில் இருந்த போது, 'RP' என்ற வார்த்தையில் பெயர் தொடங்கும் பிரபலம் ஒருவர் என்னை பார்க்கவேண்டும் என்பதற்காக பல மணி நேரம் ஹோட்டல் லாபியில் காத்திருந்தார். இதே போல 10 - 15 முறை போன் கால் செய்திருந்தார். இப்படி தீவிரமாக எனக்காக முயற்சி செய்தார் எனக்கூறியிருந்தார்.

பண்ட் உடனான பிரச்சினை

பண்ட் உடனான பிரச்சினை

ஊர்வசி கூறிய அந்த பிரபலம் ரிஷப் பண்ட் தான். கடந்த 2018ம் ஆண்டு ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் ஊர்சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. எனினும் 2019ம் ஆண்டு காதல் ஒன்றும் இல்லை என ரிஷப் பண்ட் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து ஊர்வசியின் கருத்தை மையப்படுத்தி ரிஷப் பண்ட்-ஐ ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.

ரிஷப் பண்ட் பதிலடி

ரிஷப் பண்ட் பதிலடி

இதனையடுத்து ஊர்வசிக்கு ரிஷப் பண்ட் பதிலடி கொடுத்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், பிரபலமடைவதற்காக சிலர் நேர்காணலில் இந்த அளவிற்கு கூட பொய் கூறுவார்களா என்பது வேடிக்கையாக உள்ளது. மற்றொருபுறம் பெயர் புகழுக்காக, ஒருவர் இப்படியும் அழைகிறார்களா என்று வருத்தமாகவும் உள்ளது. அவர்களுக்கு கடவுள் தான் நல்வழி காட்ட வேண்டும் என பதிவிட்டார். மேலும் இந்த பதிவை 10 நிமிடங்களில் அவர் நீக்கினார்.

 ஊர்வசி காட்டமான பதில்

ஊர்வசி காட்டமான பதில்

இந்நிலையில் பண்ட்-ன் கருத்துக்கு நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் காட்டமாக பதிலளித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சோட்டு பையா (சின்னத் தம்பி).. ஒழுங்கா பேட், பால் மட்டும் விளையாடு.. , சின்னக் குழந்தையான உங்களை வைத்து தேவையற்ற புகழ் பெறும் பெண் நான் கிடையாது. அமைதியாக இருப்பதால், ரொம்ப ஓவராக பேச வேண்டாம் என காட்டமாக பதில் கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Actress Urvashi Rautela reply to rishabh pant ( ரிஷப் பண்ட் -க்கு நடிகை ஊர்வசி ரவுத்தேலா பதில் ) நடிகர் ரிஷப் பண்ட் போட்ட இன்ஸ்டாகிராம் பதிவுக்கு நடிகை ஊர்வசி ரவுத்தேலா காட்டமான பதிலை கொடுத்துள்ளார்.
Story first published: Friday, August 12, 2022, 15:50 [IST]
Other articles published on Aug 12, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X