For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸாரி பாஸ்.. இந்திய அணியின் "கோச்" வேலையெல்லாம் நமக்குச் சரிப்படாது.. கில்கிறைஸ்ட்

டெல்லி: இந்திய அணியின் முழு நேர பயிற்சியாளர் வேலையெல்லாம் நமக்குச் சரிப்படாது. அதேசமயம், ஐபிஎல் போட்டிகளில் ஏதாவது ஒரு வகையில் பங்காற்ற தயாராக இருக்கிறேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன்-விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறைஸ்ட் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் கடந்த 2013ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடி வந்த அவர் அதன் பயிற்சியாளராகவும் இருந்தார்.

Adam Gilchrist not interested in India coaching job

அதேபோல டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தார். இந்த அணி 2009ல் கோப்பையை வென்றது. தற்போது இந்த அணி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகச் சொன்னால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, சத்தியமாக என்னால் என்னை பயிற்சியாளராக நினைத்துப் பார்க்க முடியாது. அதுவும் முழு நேர பயிற்சியாளராக என்னால் செயல்படுவது கஷடம்.

முழு நேர பயிற்சியாளர் என்றால் இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். கமிட்மெண்ட் தேவை. அது நமக்கு சரிப்படாது. அதேசமயம், வேறு வாய்ப்புகளுக்கு நான் தயாராகவே இருக்கிறேன்.

ஐபிஎல் போட்டிகளை நான் நிறைய அனுபவித்துள்ளேன். எனவே அதில் ஏதாவது ஒரு வகையில் பங்காற்ற விரும்புகிறேன். அதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளேன் என்றார் கில்கிறைஸ்ட்.

Story first published: Thursday, April 7, 2016, 17:24 [IST]
Other articles published on Apr 7, 2016
English summary
Australian great Adam Gilchrist doesn't see himself being a full-time coach with the Indian team but is very much open to making an IPL comeback in whatever role possible. Gilchrist, who played his last IPL in 2013 when he also doubled up as the coach of Kings XI Punjab, said he has loved his experience in the world's most popular T20 league.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X